பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_223 உள்ளவர்களுக்கு இப்பதிகத்தின் முதல் பாடலில் (605) 'காலம் வந்தது காண போவோம் ஒருப்படுமின்’ என்று பாடிவிட்டார். இரண்டாவது நிலையில் உள்ளவர்கள் சாதகர்கள். அவர்களுக்காக 606, 607, 608ஆம் பாடல்கள் பாடப் பெற்றன. இனி வரும் பாடல் மூன்றாவது வகையினரான நம் போன்றவர்களுக்காகும். காட்டில் உடையில்லாமல், விலங்குகள்போல் வாழ்ந்த மனிதனுக்கும் அணு யுகத்தில் வாழும் நமக்கும் என்ன அற்புதமான ஒற்றுமை! அவன் நடந்தே சென்றான். நாம் விமானத்தில் செல்கிறோம். ஒரே விநாடியில் է 16ն) கோடிக் கணக்குகளைப் போடக்கூடிய கணினிகளைக் கண்டுவிட்டோம். என்றாலும், ஆதிமனிதனுக்கும் நமக்கும் இடையே உள்ள பொதுத்தன்மை மறையவே இல்லை. மறையாதது மட்டுமன்று, ஆதிமனிதனைவிட நம்மிடத்து இமயம் போல் வளர்ந்துள்ளது அப்பொதுத்தன்மை. அதுதான் வெகுளி, சினம், கோபம் என்று பல சொற்களால் குறிக்கப்படும் ஒர் இயல்பாகும். தேவைப்பட்டபொழுது கோபப்பட்டான் ஆதிமனிதன். கோபம், அவனில் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்றைய மனிதன் கோபத்தின் ஒருபகுதியாக அல்லவா இருக்கிறான்? இந்த அணுக்குண்டு யுகத்தில் மனிதனுடைய இந்தக் கோபம் அவன் பகையைமட்டுமா அழிக்கின்றது. அவனையும் சேர்த்தல்லவா அழித்துக்கொண்டிருக்கிறது! இந்த உலகம் என்றாவது ஒரு நாள் அழிந்து சாம்பல் ஆகப்போகின்றதென்றால் அது மனிதனை அழிக்கும் கோபத்தாலேயே ஆகும். சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” (குறள்:306) என்றார் வள்ளுவர். இவற்றையெல்லாம் மனத்துட் கொண்ட அடிகளார் நம் போன்றவர்கள் உய்ய வேண்டிய வழியைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் முதற்சொல்லாக சொல்லுவது என்ன என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஆன்மிக வளர்ச்சிக்கு இடையூறாக நிற்கும் இந்த வெகுளி கோபம்)