பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224-0-திருவாசகம் சில சிந்தனைகள்-5 மனித சமுதாய முன்னேற்றத்திற்கும் நிலைபேற்றிற்கும்கூட இடையூறாக இருத்தலின் அமைச்சராக இருந்து அருளாளராக மாறிய பெருமான் நமக்கு உபதேசம் செய்யும்பொழுது முதல் தொடராக விடுமின்’ என்று பேசுகிறார். வெகுளியை விடுமின் என்பதற்கும், விடுமின் வெகுளியை என்பதற்கும் வேறுபாடு உண்டு. வெகுளியை விடுமின் என்றால் நம்மிடம் உள்ள பலவற்றில் வெகுளியும் ஒன்று, அதனை விடுங்கள் என்பது பொருளாகும். ஆனால் ‘விடுமின் வெகுளியை’ என்றால் முற்றிலுமாக விடப் படவேண்டியவற்றுள் முதலில் நிற்பது வெகுளி என்ற பொருளைத்தரும். - அடுத்தபடியாக நிற்பது ஒன்றுண்டு. அதுதான் ஆசை என்பது. ஆசையை நோய் என்ற பொருளில் வேட்கைநோய், என்று பாடுகிறார் அடிகளார். அதனை நோய் என்று குறிப்பதற்கு ஒரு காரணமுண்டு. மாபெரும் விஞ்ஞானியாகிய அடிகளாருக்கு நோயின் இயல்பு தெரியும். இன்று மனித சாதியை அழிக்கும் பல நோய்கள் அனைவருடைய உடம்பிலும் இருக்கத்தான் செய்கின்றன. நம்மிடம் உள்ள எதிர்ப்புச் சக்தி காரணமாக அந்த நோய்கள் தலைதூக்கமுடியாமல் அடங்கிக் கிடக்கின்றன. சந்தர்ப்பம் ஏற்பட்டால் உள்ளே இருக்கும் அந்த நோய் விசுவரூபம் எடுத்துவிடும். ஆசையும் அப்படித்தான். ஆசை என்பது மனித மனத்திற்கு இயல்பான ஒன்று. அது எல்லையுள் அடங்கியிருக்கின்றவரையில் மனிதன் வளர்ச்சியடையமுடியும். அது எல்லை கடந்துவிட்டால் மனிதனை அழித்துவிடும். ஆகவே, ஆசையை நோய் என்றார். விடுமின் என்பதை முதலில் கூறி, முதலில் விடவேண்டியது வெகுளி என்றும், அதனுடன் கூடவே விடவேண்டியது வேட்கை என்றும் கூறுகிறார். வேட்கை எனப்படும் இதனைத் 'தவாப் பிறப்பு ஈனும் வித்து (குறள்: 36) என்று வள்ளுவரும்,