பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருவாசகம் சில சிந்தனைகள்-5 தனிமனிதனாக இருக்கும்பொழுது எவ்வளவுதான் பொறி, புலன்களை அடக்க முயன்றாலும் மனம் தறிகெட்டு அலைவதை அடக்க முடிவதில்லை. அதுவும் அடங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி அந்த நிலையில் உள்ள மக்கட்கூட்டத்திடைத் தானும் ஒருவனாகக் கலந்துவிடுவதுதான். 'மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு - இனத்து உளதாகும் அறிவு (குறள்:454 ) என்றார் வள்ளுவர். தொண்டரொடு கூட்டு கண்டாய்” (தாயுமான சுகவாரி:7) என்று தாயுமானவப் பெருந்தகை கூறுவதும் இதனையே ஆகும். அடிகளார், மன இயலையும் நன்கு அறிந்த விஞ்ஞானி ஆதலின் சாத்தொடு ஒருப்படுமி ன்’ என்றார். சாதகர்களைப் பற்றிக் கூறும் 606, 607, 608ஆம் பாடல்களில் சாத்தைப்பற்றிப் பேசவில்லை. காரணம், சாதாரண மனித நிலையிலிருந்து பல நிலைகள் கடந்து சாதக நிலையை அவர்கள் அடைந்துவிட்டவர்கள் ஆதலின் சாத்தைப் பற்றிக் இங்குக் குறிப்பிடவில்லை. ஆனால், இப்பாடல் (609) பொதுமக்கட்கு ஆதலின் சாத்தோடு ஒருப்படுமின் என்று இங்கே பேசுகிறார். சாத்தோடு கூடியவர்கள் என்ன செய்யவேண்டும்? புயங்கன் ஆள்வான் புகழ்களைப் புடைபட்டு (சாத்தினிடையே இருந்து போற்றுங்கள் என்கிறார். ஐந்தாம் பாடலில் (609), 'உங்கள் ஒத்த மனநிலை உடையவர்களோடு சேர்ந்து அவன் புகழைப் பாடுங்கள்' என்று கூறிய அடிகளார், இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். தம்மை ஒத்த அடியவர் கூட்டத்தினிடையே நின்று அவன் புகழ் பாடினால் மட்டும் போதாது. மிக முக்கியமான ஒன்றை இரண்டாவது அடியில் பேசுகிறார். புகழ்தல், பூப் புனைதல், தொழுதல் ஆகியவற்றில் மொழி, மெய் என்ற இரண்டிற்கும் உரிய பணியைத் தந்தாகிவிட்டது. எஞ்சியுள்ளது LŪGŪTLD