பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_229 609ஆம் பாடல் நம்போன்ற சாதாரண மக்களுக்காகச் சொல்லப்பட்டது என்று கூறியுள்ளோம். விடுமின் வெகுளி' தொடங்கி 610ஆம் பாடவில் உள்ள ‘பூப்புனைமின்’ என்பதுவரையிலுள்ள பகுதி சாதாரண மக்களுக்கே கூறப்பட்டது. என்றாலும் அடுத்துவரும் ‘புயங்கன்தாளே புந்தி வைத்திட்டு என்ற பகுதி சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் சாதகர்களையும் உளப்படுத்திக் கூறியதாகும். சாதகர்களுக்கும் வரும் பல்வேறு இடையூறுகளை வெல்வதற்கு தாளைப் புந்தியில் வைப்பது இன்றியமையாததாகும். இந்தப் பணியைச் செம்மையாகச் செய்துவிட்டால் புகழ்தல், தொழுதல், பூப் புனைதல் ஆகிய செயல்கள் வெறும் சடங்குகளாக இல்லாமல் உண்மையான பூசனையாக இருக்கும். நம்மில் பலரும் தாளைப் புந்தியில் வைக்கும் செயலை விட்டுவிட்டு ஏனைய சடங்குகளை மட்டும் செய்வதால் அது நாவரசர் பெருமான் கூறிய 'பொக்கம் மிக்கவர் பூசனை'யாகவே முடியும். தாள் புந்தியில் வந்து தங்கிற்றா, இல்லையா என்பதை அறிய அடிகளார் ஒரு சுலபமான வழியினை 610ஆம் பாடலின் இரண்டாம் அடியில் தருகின்றார். எல்லா அல்லலையும் இகழ்மின் என்கிறார். அல்லல் எதிரே வரும்போதோ அல்லது அதனிடைச் சிக்கியபோதோ அதனைத் துச்சம் என்று இகழ்ந்து தள்ளக்கூடிய மனத் திட்பம் வந்துவிட்டதா? இகழக்கூடிய திடம் மனத்தில் வந்துவிட்டால் புயங்கன் தாள் புந்தியில் வந்துவிட்டது என்பதற்கு அடையாளம். . இந்த நிலைக்கு அடுத்தபடி எந்த இடையூறும் நம்மை நோக்கி வரத் துணிவு பெறாது. வந்த அல்லலை இகழ்ந்துவிட்டோம்; இனி இடையூறு வரப்போவதில்லை; புந்தியில் புயங்கன் தாள் தங்கிவிட்டது. பூப் புனைதல், தொழுதல், புகழ்தல் ஆகியவற்றைச் செய்கின்றோம். இதன்