பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 9 15 மாபெரும் கல்வியாளராகிய அடிகளார் இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்துள்ளார்; ஆதலின் குலாத் தில்லையை நோக்கித் தாம் செல்லுகையில் தம்முடைய சிந்தையும் எல்லையற்ற ஈடுபாட்டுடன் மிக வேகமாகத் தம் பின்னே வருகிறது என்று கூறுகிறார். இதில் என்ன புதுமை என்று கேட்பவர்களும் உண்டு. ஒருவன் போகின்ற போக்கைச் சிந்தை ஏற்றுக்கொள்ளும் என்றோ, அவன் போக்கிற்கு உறுதுணையாக உடன்வரும் என்றோ சொல்லமுடியாது. சிந்தையின் இயல்பாகும் அது. ஆனால், அடிகளாரைப் பொறுத்தமட்டில் தம் சிந்தை தம்மைப் பின்தொடர்ந்து அணுக்கத்தில் வருகிறது; அதன் பயனாகத் தாம் தில்லையை அணுகியதாகக் கூறுகிறார். அவருடைய சிந்தை என்ன காரணத்தால் அவரைப் பின்பற்றி வருகிறது? அந்தக் காரணத்தைச் சொல்வதற்கு மிக அழகான அடைமொழியொன்றைச் சிந்தைக்குத் தருகிறார் அடிகளார். நம்பும் என் சிந்தை' என்றதால் இறைவன் உள்ளானா? இல்லையா? உயிர்களாகிய நாம் அவனை அணுக முடியாதா? முடியுமா? என்ற தேவையற்ற ஆராய்ச்சிகளில் அவருடைய சிந்தை ஈடுபடாமல் பெரு நம்பிக்கை கொண்டு அவர்பின்னே செல்கிறது என்பதைத் தெரிவிக்கிறார். - சிந்தை இறைவனிடம் முழு நம்பிக்கையைப் பெற்று விட்டதால், அடிகளார் வாழ்க்கையில் அவர் விரும்பியபடி முன்னேற முடிந்தது. இந்த நம்பிக்கையை அவருடைய சிந்தை பெறுவதற்குக் 35ströðTLDsrö, இருந்தது திருப்பெருந்துறை அனுபவமாகும். இதனை அடிகளாரே' நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் (229) என்ற பாடல்மூலம் தெரிவிக்கின்றார்.