பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230-திருவாசகம் சில சிந்தனைகள்-5 முடிவு என்ன தெரியுமா? திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கி நிகழும் அடியார் முன்சென்று நாம் நெஞ்சம் உருகி நிற்போம் என்பதாகும். 606, 607, 608ஆம் பாடல்களில் சாதகர்களுக்குரிய வழிமுறைகளைச் சொன்னாரே தவிர, 609, 610ஆம் பாடல்களைப் போல் அடிகளார் தாமே முன்னின்று நடத்திச்செல்லும் முறையில் அப்பாடல்களை அமைக்கவில்லை. 609ஆம் பாடலில் தாமே நடத்திச்செல்லும் முறையைத் தொடங்குகின்றார். நாம்போய்ச் சிவபுரத்துள் புடைபட்டுருகிப் போற்றுவோம். என்று தொடங்கியவர், புறப்படும் அடியார்களைத் திரும்பிப்பார்க்கிறார். புறப்பட்டுச் சில தப்படிகள் வைத்தவர் சிலர், இடத்தை விட்டு எழுந்திராமல் போகலாமா, வேண்டாமா என்ற இரண்டாட்டத்தில் இருப்பவர் சிலர். அப்படி புறப்படலாமா, வேண்டாமா என்று இருப்பவர்களைப் பார்த்து நிற்பார் நிற்க' என்று பேசுகிறார். இவர் இவ்வாறு கூறியவுடன் அரைகுறை மனத்தோடு எழுந்தவர்களுக்குப் போவதா வேண்டாவா என்ற இரண்டாட்டம் அதிகமாயிற்று. அவர்கள் முகம் அவர்கள் மனப்போராட்டத்தை எடுத்துக்காட்ட, அதனைக் கண்ட அடிகளார் சற்றுக் கடுமையாக நிற்பீர் எல்லாம் நிற்கும் பரிசே தாழாதே ஒருப்படுமின் என்ற முடிவான கட்டளையை எடுத்து வீசுகிறார். அரைகுறை மனமுடையாருக்கு இப்பொழுது சந்தேகம் வந்துவிட்டது. அடிகளாரும் தங்களுடன் சேர்ந்து தங்கிவிடுவாரோ என்ற ஐயம் தோன்றலாயிற்று. அதனைப் போக்குபவர்போல நில்லா உலகின் நில்லோம் இனிநாம் செல்வோமே என்று உடன் வருகின்ற ஒருசிலருடைய உறுதிப்பாட்டை எடுத்துக் பேசுகின்றார். அப்படியானால் எங்கே இவர் புறப்பட்டுவிட்டார் என்ற ஐயம், தங்கிவிடும் எண்ணம் 2_6.) –l f சிலருக்குத் தோன்றுமல்லவா? அதற்கு