பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருவாசகம் சில சிந்தனைகள் 5 கொண்டவர்கள் அனுபவிக்கும் பயனாகும். மூன்று, நான்காம் அடிகளில் சொல்லப்பட்டது, இந்த உடம்பை நீத்த பிறகு செய்யப்படவேண்டிய கடமையும், கிடைக்கப் போகின்ற பயனும் என்ன என்பதாகும். முதலடியில் சொல்லப்பெற்ற சுவையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அடுத்தபடிக்குச் செல்ல முயல வேண்டுமே தவிரத் தளரக்கூடாது. மனம் தொய்வு அடையப்பெற்றால் என்ன நிகழும் என்பதை இரண்டாமடியில் கூறுகிறார். அதுவே அருமாலுற்று அழுங்கி அரற்றுதலாகும். - பொய்யான இந்த உலகத்தில் கிடந்து புரள்வதில் இன்பம் காண்கின்றவர் பலர். இதை விட்டுவிட்டு, அவன் திருவடியைச் சேரக் கருதி உறுதிப்பாட்டுடன் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திப்பீர்களாக' என்கிறார். பல்வேறு எண்ணங்களால் உந்தப்பெற்று மனம் தறிகெட்டு அலைவதுபோல் அலையும் இயல்பு சிந்தனைக்கு இல்லை. என்றாலும், அந்தச் சிந்தனைக்குக் கூடச் சில சமயங்களில் வழுக்கிவிழும் இயல்பு உண்டு. சிந்தனை வழுக்கிவிழாமல் இருக்கவேண்டுமேயானால் அதற்கென்று ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். திருவடியைச் சேரக் கருதுவதுதான் அந்தக் குறிக்கோள். குறிக்கோள் இதுதான் என்ற முடிவு வந்தவுடன் அந்தச் சிந்தனை அந்தக் குறிக்கோளைத் தவிர வேறு இடம் செல்லாமல் திருந்த வைத்து, குறிக்கோளையே சிந்திக்கவேண்டும்(சிந்திமின்). இந்த ஒரே குறிக்கோளுடன், ஏகாக்ர சித்தத்துடன் சிந்திக்கத் தொடங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா? புயங்கன் அருளமுதத்தை ஆரப் பருகி அழுந்த முடியும். எனவே, தெளிந்த சிந்தனையுடன் குறிக்கோளை நோக்கிச் செல்வீர்களாக என்கிறார். இந்த உலகின் நிலைமை, நம்முடைய குறிக்கோள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இன்றே வந்து அவன்