பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருவாசகம் சில சிந்தனைகள்-5 நாயினும் கடையேன் என்று ஓயாமல் தம்மைச் சொல்லிக்கொண்டிருந்த அடிகளாருக்கு, கூத்தன் ஒரு மாபெரும் தைரியத்தை உள்ளத்துள் உண்டாக்கினான். அவனுடைய எண்ணப்படியே பராஅமுதாகிய திருவாசகம் புனையப்பட்டுவிட்டது; இவ்வுலகிடை அடிகளார் வந்த வேலை முடிந்துவிட்டது; ஒர் எட்டில் அவன் திருவடிகளை அடையும் நிலைக்கு வந்தாகிவிட்டது; இந்த நிலையில் அடிகளாருடைய பரந்து விரிந்த மனத்தில் உலக மக்களின் காட்சி தென்படுகிறது. போவதற்குமுன்னர் அவர்களுக்குச் சில அறவுரைகள் கூறி, வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக் கூறி, உடனே புறப்படுங்கள்; பிற்பால் நின்று பேழ்கணித்தால், பெம்மான் பெறுதற்கரியன்’ என்பதையும் நினைவூட்டுகிறார். - திருவாசகத்திலுள்ள 658 பாடல்களிலும் இந்த யாத்திரைப் பத்தின் பத்துப் பாடல்கள் தனித்து விளங்குகின்றன. அருளாளர்கள், சாதகர்கள், சாதாரண மக்கள் ஆகிய மூன்று தரத்தாருக்கும் பத்தே பாடல்களில் வழி கூறிய பெருமை யாத்திரைப் பத்து ஒன்றிற்குமட்டுமே உண்டு. - திருப்படைஎழுச்சி மனிதர்களாகப் பிறந்துவிட்டால் அஞ்ஞானம், துன்பம் என்ற இரண்டும் அவ்வாழ்க்கையில் பெரியதோர் இடத்தைப் பற்றிநிற்கும். ஐந்நூறு ஆண்டுகள் தவம் செய்து இறுதியாக ஒரு பெண்ணின் பொருட்டாக அத்தனையையும் இழந்த விசுவாமித்திரன் கதை, அஞ்ஞானத்தின் செயற்பாட்டுக்கு உதாரணமாகும். சுந்தரர் உற்ற நோய், நாவரசர் பெற்ற வயிற்று வலி முதலியவை அடியார்களையும் அல்லல் விட்டுவைப்பதில்லை என்பதற்கு உதாரணங்களாகும். அஞ்ஞானம், துன்பம்