பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_237 வினையோடு இரண்டறக் கலந்த நாமுமல்லவா சுடப்படுவோம். எனவே, தீயின் சூட்டுக்கு அஞ்சி, இந்த வினை இருந்தால் இருந்துவிட்டுப் போகிறது என்றே பலரும் நினைவர். மனித மனத்தின் இந்தக் குறைபாட்டை எண்ணிய அடிகளார் தேன் உந்து என்ற சொல்லைச் ‘செந்தீயோடு சேர்ப்பதால் செந்தீயின் உக்கிரத்தைக் குறைக்கின்றார். . தேனை உண்ணவேண்டும் என்ற ஆசை உடையவர்கள். அது சூடாக இருந்தாற்கூட வாயில் ஊற்றிக்கொள்வர். இந்தத் தன்மையை, சிந்தாமணி ஆசிரியர் வெய்ய தேன் வாய்க் கொண்டாற்போல் விழுங்கலோடு உமிழ்தல் தேற்றான் (சீவக.2072) என்று பாடுகிறார். ஆகவே, தேனுந்து செந்தீ என்று கூறிய அடிகளார், செந்தீக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை மருவுதல் வேண்டும் என்று கூறுகிறார். ஒரு பொருளை மருவினால் அச்செயலில் பெரிதும் ஈடுபடுவது மார்பேயாகும். மார்பை ஒட்டியிருக்கும் மனத்தில் வினை தோன்றுவதற்குரிய நிலைக்களன் இருத்தலின், வெய்யவினை இரண்டும் வெந்து அகலத் தேனுந்து செந்தியை மருவ வேண்டும் என்றார். இப்பகுதியின் இரண்டாம் பாடல் (618) பெரும்பாலான அருளாளர்கள் வாழ்க்கையில் இயல்பாக நடைபெறும் ஒரு செய்தியைக் கூறுகின்றது. பட்டினத்துப் பிள்ளைக்குக் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே (திருப்பாடற்றிரட்டு:10,1) என்ற தொடர் உபதேசமாயிற்று. அருணகிரிப் பெருமானுக்குச் சும்மா இரு சொல்லற (கந்தரனுபூதி.12 என்ற தொடர் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்பெருமக்கள் எதிர்பாராமல் கிடைத்த இந்த உபதேசங்களையே தம் வாழ்வின் திருப்புமையங்களாகக் கொண்டு முன்னேறியுள்ளனர்.