பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238-திருவாசகம் சில சிந்தனைகள்-5 அடிகளார் வாழ்க்கையில் பெருந்துறை நாயகன் மால் ஏற்றி, வாரா வழியருளி அவருடைய போக்கையே மாற்றிவிட்டான். பிற்காலத்தில் இந்த நிகழ்ச்சியை நினைந்து பார்க்கின்ற அடிகளார், அதில் பெரிதும் ஈடுபடுகிறார். இத்தகைய புனர்ஜென்மம் யாரால் வந்தது? பெருந்துறை நாயகனால்தானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்ற ஆராய்ச்சியில் ஒருவேளை ஈடுபட்டிருத்தல்கூடும். குருநாதரைச் சந்தித்து அவருடன் இருந்த நேரம் ஒருசில விநாடிகளே ஆகும். அந்த விநாடி நேரத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்ற வினாவை எழுப்பிக்கொண்டு சிந்தனையில் ஈடுபட்டார் போலும். - தம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கின்ற அடிகளாருக்கு இந்த ஒரு நிகழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் தம் வாழ்க்கையைத் திருப்பவில்லை என்ற முடிவான எண்ணம் உறுதிப்படுகிறது. அந்த மனநிலையில் பாடப்பட்ட பாடலாகும் இது. யாரேனும் ஒருவர் தம்மிடம் வந்து, 'மணிவாசகரே! இத்தனை சிறப்புக்களையும் நீர் பெற, கடவுட்பித்து ஏற உமக்கு அருள் செய்தவர்கள் வேறு யாருமில்லை. உம் வினைக.ட இதனைச் செய்யவில்லை.திருப்பெருந்துறையான் தான் இதனைச் செய்தான்’ என்று உறுதிபடக் கூறுவார்களேயாயின், அதனைக் கேட்டவுடன் எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் ஆர்ப்பேன் அரற்றுவேன்' என்கிறார். - இதனைப் படிக்கும்போது ஒரு சிறு சிக்கல் மனத்திடைத் தோன்றத்தான் செய்கிறது. பெருந்துறையான் அருளை நேரிடையாகப் பெற்று இறையனுபவத்தில் மூழ்கிய அடிகளார், 'யாரேனும் ஒருவர் வந்து என்னிடம் கூறினால் என்று ஏன் பாடவேண்டும்? இதுவும் மனித மனத்தின் ஒரு விந்தையான கூறாகும். ஒரு குறிப்பிட்ட