பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_239 செயல் அல்லது நிகழ்ச்சிபற்றி எவ்வளவு வலுவான முடிவை நாம் கொண்டிருந்தாலும் புறத்தேயுள்ள ஒருவர் அந்த முடிவு சரியானது என்பதைக் கூறுவார்களேயானால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சி தனிப்பட்டதுதான். இந்த இயல்பைத்தான் அடிகளார். பேசுகிறார். வள்ளுவப் பேராசான் ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள் 69 ) என்று பாடியதும் இந்த நுண்மையான கருத்தை அறிவுறுத்தவேயாகும். கேட்ட' என்ற சொல்லை மிக அற்புதமாக வள்ளுவர் பயன்படுத்தியுள்ளா. இதனை நன்கு அறிந்த மகாகவிபாரதியார் கண்ணம்மா என் குழந்தை' என்ற தலைப்பில் பாடும்போது, மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி" என்று குறிப்பிடுகின்றார். இளமைதொட்டே ஒரு குறிக்கோளை முன்னிறுத்திக் கொண்டு அதனை நோக்கி முன்னேறுபவர் சிலர். ஒரு சிலர் இந்த முறையில் செல்லாமல் சராசரி வாழ்வில் ஈடுபட்டு உலக இன்ப துன்பங்களை அனுபவித்து வாழ்ந்துகொண்டே செல்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் யாரோ ஒருவர் சொல்லிய சொல், அல்லது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி வாழ்வையே திசை திருப்பும் ஒரு கருவியாக அமைந்துவிடுதலும் உண்டு. வளர்ந்துவிட்ட அந்த நிலையிலிருந்து தங்களுடைய பழைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் இயல்பு இத்தகைய பெருமக்களிடை உண்டு. இவ்வளவு அரிய சிறப்பைப் பெற நான் என்ன செய்தேன் என்ற வினாவை அவர்கள் எழுப்பிக் கொள்கின்றனர். உயர்ந்தவர்கள் ஆதலால், எங்கோ எப்பொழுதோ செய்த தினையளவு குற்றம் பனையளவாகக் காட்சியளிக்கிறது. அதையே பெரிதுபடுத்தி இப்பெருமக்கள் பாடுகின்றனர். இதனையே அடிகளார், செய்த பிழை