பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருவாசகம் சில சிந்தனைகள்-5 தலைவனால் ஆட்கொள்ளப்பெற்ற காரணத்தால் அவருடைய சிந்தையில் வலுவான நம்பிக்கை பிறந்தது. அதனை நினைவிற் கொண்டுதான் நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம் என்று பாடுகிறார். 565, மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் எனக் களித்து இங்கு அதிர்க்கும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 7 அதிர்த்தல்-சிலம்பொலித்தல் - பாடலின் முதலிரண்டு அடிகளில் ஒர் அழகான கருத்தைப் பெறவைக்கிறார் அடிகளார். வீரத்தால் மிக்கவர்கள் அனைவரும் மதித்துப் பாராட்டும் இராவணனுடைய இருபது தோள்களும் ந்ெரியும்படியாகத் தன் விரலால் அழுத்தினான் என்று கூறுவது பழைய கதைபற்றியதாகும். இக்கதையை நினைவூட்டுவதன் மூலம் ஓர் அற்புதமான கருத்தைப் பெறவைக்கிறார் அடிகளார். இராவணனுடைய பத்துத் தலைகளிலும் அகங்கார, மமகாரங்கள் நிறைந்திருந்தன. அவனால் அவற்றை வளர்த்துக்கொள்ள முடிந்ததே தவிரப் போக்கிக்கொள்ள முடியவில்லை. பரம கருணா மூர்த்தியாகிய இறைவன் என்ன செய்தான் தெரியுமா? தன் திருவடியால் ஒருமுறை அழுத்தினான். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இறைவன் திருவடி அரக்கன் தலைமேல் படவேயில்லை. திருவடி அழுத்தியது கயிலைமலையைத்தான். அந்தக் கயிலை மலை அரக்கன் தோள்மேல் அமர்ந்திருந்தது. திருவடிக்கும் தோளுக்கும் இடையே மிகப் பெரிய கயிலை மலை இருந்தும், திருவடி தன் பணியைச் செய்துவிட்டது. திருவடி அழுத்தியவுடன் இராவணனுடைய அகங்கார, மமகாரங்கள் சிதைந்து, அவன் சாமகானம் பாடத் தொடங்கிவிட்டான்.