பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240-திருவாசகம் சில சிந்தனைகள் 5 அறியேன் சேவடியே கை தொழுது உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன்” (619) என்று பாடுகின்றார். சேவடி கை தொழாமலா இருந்திருப்பார்? வரகுணன் போன்ற சிவ பக்தனிடம் அமைச்சராக இருந்த ஒருவர் சேவடி கை தொழாமலா இருந்திருக்க முடியும்! ஆனால், என்றோ ஒருநாள் அல்லது சில நாட்கள் வேலைப் பளுக் காரணமாகக் கைதொழ மறந்திருக்கலாம். இப்பொழுது அதனைப் பெரிதுபடுத்திப் பாடுகிறார். சேவடி தொழும் நிலை மூச்சுக் காற்றுப்போல் ஒரு விநாடியும் இடைவிடாமல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. பின்னர் எவ்வாறு இந்த நிலை கிடைத்தது? அடுத்தபடியாக, அதற்கு விடை கூறுகிறார். வையத்து இருந்து உறையுள் வேல்மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான் என்பதே அந்த விடையாகும். நானாக முயன்று செய்யாத ஒரு காரியத்தை பெருந்துறை நாயகன் குருவடிவு தாங்கி இவ்வையத்து வந்து, உறையுள் இருக்கும் வேலை எடுத்து என் மார்பில் பாய்ச்சியதுபோல என் சிந்தனையில் மெய்ஞ்ஞானத்தைப் வேல்) புகுத்தினான் என்க. உலகில் சில செயல்கள் நம் கண்முன்னர் நேரிடையாக நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக நாம் காணாத முறையில் நமக்குப் பின்புறத்தில் நடைபெறுகின்றன. வினையையோ அது செய்யும் செயல்களையோ நாம் கண்ணால் காண முடிவதில்லை. ஆனால், அவற்றின் பயனை அனுபவித்தே தீருகின்றோம். பல சமயங்களில் இந்தப் பயன்களையும் அதனைத் தரும் வினைகளையும் வேரொடு களைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சிந்திக்கின்றோம். ஆனால், கண்ணுக்குத் தெரியாத வினையை எவ்வாறு அறுப்பது? இதனை யாரேனும் செய்யக்கூடுமேயானால் அவருக்கு வாணாள் முழுதும் நன்றிக்கடன்பட்டிருப்போம். இதனையே