பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_24 அடிகளார் முன்னை வினை இரண்டின் வேர் அறுத்தவன்” (620) இதோ என் முன் நிற்கின்றான் என்று பாடுகின்றார். இருவினை என்று அடிகளார் குறிப்பிடுவது சஞ்சித, பிராரத்துவ வினைகளையாகும். முன்னை வினைகள் இரண்டையும் வேர் அறுத்ததோடு விட்டானா அவன்? பிறப்புக்குரிய வேர்களில் இரண்டை அறுத்துவிட்டான். ஆனால் ஆகாமியம் என்ற மூன்றாவது ஒரு வேர் இருக்கிறதே! இதனை என்ன செய்வது? பின்னே இருந்த வினைகளை அறுத்த அவன் இப்போது ஏன் முன்னே நிற்கின்றான் என்று தெரிகிறதா? வாழ்க்கையில் நாள்தோறும் நடைபெறுகின்ற செயல்களால் வருவதன்றோ ஆகாமியம்? அதனைப் போக்கவே முன்னர் நிற்கின்றான். அவன் முன்னே நிற்பதால் என்ன பயன் என்று கேட்கிறீர்களார். இந்த ஆகாமிய வினை வளரவளர எதிரே இருப்பவன் அந்தந்த விநாடியில் அதனை அறுத்துவிடுகிறான். அதனையே பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்’ என்கிறார். - ‘பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்’ என்று நான்காம் பாடலில் (620) கூறினாரல்லவா? அது எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை ஐந்தாம் பாடலில் (62) விளக்குகின்றார். மாபெரும் மன்னன் ஒருவன் ஒர் இடத்தில் அமர்ந்திருக்கிறான் என்றால் அவனுடைய கண்ணசைப்போ அல்லது வாய்மொழி ஆணையோ இல்லாமல் அங்கு எதுவும் நடைபெறாது. அதுபோல அடிகளார் உள்ளத்தில் இப்பொழுது அமர்ந்திருப்பவன் լլորfr தெரியுமா? 'பெருந்துறையுள் மேய பெருமான்' என்கிறார். உள்ளத்துள் அவன் வந்து தங்கிவிட்டால் அவனை மீறி ஆகாமிய வினை எதுவும் நடைபெறப்போவதில்லை. .