பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242_திருவாசகம் சில சிந்தனைகள்-5 பேராற்றல் படைத்தவன்தானே இதனைச் செய்யமுடியும்! ஆகாமிய வினையையே போக்கக்கூடிய ஒருவன் என்றால், அவன் எவ்வளவு பேராற்றல் வாய்ந்தவனாக இருத்தல் வேண்டும்! பெருந்துறையுள் மேய பெருமான் என்று கூறிவிட்டால் எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள முடியுமா? அதற்காகவே முதலிரண்டு அடிகளில் அனைத்து உலகும் ஈன்ற மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன்’ என்று அவனது இலக்கணத்தை விளக்குகின்றார். இத்தகைய ஒருவன் என்னுள் பிரியாது இருந்து உறைகின்றான். ஆதலாலும், அவ்வப்பொழுது என் ஆகாமிய வினையைச் சுட்டெரிக்கின்றான் ஆதலாலும் 'பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் (620) என்று கூறினார். . பெருந்துறை நாயகன் மூன்று செயல்களைத் தமக்குச் செய்ததாக ஆறாம் பாடலில் 622 அடிகளார். பேசுகிறார். அவன் செய்த மூன்று செயல்களாவன: பித்து என்னை ஏற்றிய செயல், பிறப்பு அறுத்த செயல், என் மனத்தை மத்தமே ஆக்கிய செயல் ஆகியவையாம். இம்மூன்று செயல்களும் வெவ்வேறானவை. பிறப்பு அறுத்தல் என்ற நடுவேயுள்ள செயல் இனி என்றோ ஒருநாள் நடை பெறவேண்டிய செயலாகும். இப்பொழுது அடிகளார் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்! உடனடியாக அவருள் பித்தை ஏற்றினான். ஏற்றப்பட்ட ஒன்று உடனேயோ, சற்றுக் கழித்தோ, இறங்கிவிடும் இயல்புடையதாதலின், தான் ஏற்றிய பித்தை இறங்கி விடாமல் நிலை பெறுமாறு செய்தல் இரண்டாவது செயலாகும். அதாவது அவருடைய உள்ளம் திருவடிகளையே ப்ற்றிக்கொண்டு உன்மத்தம் பிடித்து நிலைபெற்று இருக்குமாறு செய்தான். உடனடியாகச் செய்யப்பட்ட செயல்கள் இரண்டு. பின்னர் என்றோ