பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_243 ஒருநாள் நிகழவேண்டிய செயல் ஒன்று. ஆக இந்த மூன்றையும் ஏதோ பெரு முயற்சி செய்து, கடின உழைப்பால் செய்தான் என்று நினைக்கிறீர்களா? இம்மூன்று செயல்களும் எடுத்து விளக்கமுடியாத (பேச்சரிதாம்) மாபெரும் செயல்கள் என்பது புரிகிறதல்லவா? அப்படியிருந்தும் பெருந்துறை அத்தன் இதனை எவ்வாறு செய்தான்? எவ்வளவு நாட்களில் செய்தான்? அதுதான் வேடிக்கை தம்மைப் பார்த்த ஒரே பார்வையில் இந்த மூன்று செயல்களும் நிகழ்ந்துவிட்டன என்கிறார். இதுமட்டுமா செய்தான்? இவற்றைச் செய்ததோடு நில்லாமல், பேரருள் செய்து ஆட்கொள்ளவும் செய்தான் என்கிறார். உலகிடை வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உபகாரத்தை மறக்கக்கூடாது என்பதோடுமட்டுமன்றி நன்றியையும் பாராட்ட வேண்டும் என்று கருதினர் இந்நாட்டவர். இந்த நிலையில் உபகாரத்தைப்பற்றி நினைக்கும்பொழுதே இதனைச் செய்தவன் u irrsio என்ற வின்ாத் தோன்றுகிறது. அடுத்தபடியாக இந்தச் சிறப்பைப் பெற எனக்கென்ன தகுதி என்ற வினாத் தோன்றுகிறது. இந்த அடிப்படையில் தான் எட்டாம் பாடல் (624) தோன்றுகிறது. செய்யப்பெற்ற உபகாரம் 620, 621, 622 ஆகிய பாடல்களில் விரிவாகப் பேசப்பெறுகிறது. இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தவன் என்றவுடன் யாரவன் என்ற வினாத் தோன்றுமன்றோ அதற்கு விடையாக 624ஆம் பாடலின் முதலடி அமைகின்றது. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீர் உடையான்' என்பதே அந்த அடியாகும். அவ்வளவு பெரியவன் இவ்வளவு பெரிய உபகாரத்தை யாருக்குச் செய்தான் தெரியுமா? அதுவே வியப்புக்குரியதாகும். யாவர்க்கும் கீழாம் அடிய்ேனை