பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 o ÉGomersih sta சிந்தனைகள்-5 என்பதால் பெற்றுக்கொண்டவரின் இலக்கணத்தையும் பேசிவிட்டார். முதலில் மூன்று பாடல்களில் விரிவாகச் சொல்லியவற்றை இங்கே சுருக்கி யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தான் (624) என்று முடிக்கின்றார். சாதாரண உபகாரத்திற்கு நன்றி சொல்லலாம். கைம்மாறுகூடச் செய்யலாம். ஆனால், யாரும் பெற்றறியா இன்பத்துள் வைத்த ஒருவனுக்கு எப்படி நன்றி சொல்வது, எவ்வாறு கைம்மாறு செய்வது என்று அங்கலாய்க்கிறார். தொடக்கத்திலிருந்தே அடிகளாரின் உள்ளம் ஈடுபட்டது குருநாதர் வடிவில் என்று முன்னரும் கூறியுள்ளோம். குருநாதர் என்று கூறியவுடன் அவருடைய முகமண்டலத்தில் ஈடுபட்டதைக்காட்டிலும், திருவடிகளில்தான் அடிகளாரின் மனம் அவருடைய அதிகம் ஈடுபட்டது. ஆக, சென்ற எட்டுப் பாடல்களில் பெருந்துறை நாயகன் பற்றிப் பேசிவந்த அடிகளாரின் எண்ணம் பெருந்துறையைக் கடந்து மதுரைக்கு வந்து, குதிரைச்சேவகனிடம் நின்று, அச்சேவகனின் திருவடிகளில் லயித்துவிடுகிறது. குதிரைச் சேவகனுடைய தேஜோமயமான முக மண்டலத்தில் பலர் ஈடுபட்டனர். பாண்டியன்கூட அப்படித்தான். ஆனால், அடிகளாரின் ஈடுபாடு அங்கவடிக்குள் நுழைந்திருந்த அக்குதிரைச் சேவகனுடைய திருவடிகளிலேயே செல்கின்றது. திருவடிப் பேறு அல்லது திருவருட் பேறு என்பதைச் சைவர்கள் பெரிதும் போற்றுவார்கள் என்றாலும் அடிகளார் ஈடுபட்டது திருவடி வடிவாகவுள்ள திருவருளில் அன்று உண்மைத் திருவடியிலேயே ஆகும். காரணம், குருநாதரைவிட அவர் திருவடி சிறந்தது என்று கருதியதுபோல இங்கும் குதிரைச் சேவகனைவிட அவன் திருவடி சிறந்தது என்று கருதுகின்றார். அதனையே 'மா