பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 246-திருவாசகம் சில சிந்தனைகள் 5 திருப்பெருந்துறை நாயகன் நீண்டகாலம் தங்கியிருந்த பெருந்துறையை விட்டு யாரேனும் ஒருவருடைய உள்ளத்தில் குடிபுக வேண்டும் என்று நினைத்தான்போலும், குருந்தமரத்தடியிலிருந்து நெடுங்காலம் காத்துக் கொண்டிருந்த அவனுக்குத் திருவாதவூரர் என்ற அமைச்சர் வசமாகச் இக்கினார். அவருடைய உள்ளத்தில் குடிபுகவேண்டும் என்று பெருந்துறை நாயகன் முடிவு செய்துவிட்டான். ஆனால், வாதவூரரின் நெஞ்சத்தில் இவன் புக இடமின்றி எத்தனையோ குடிபுகுந்திருந்தன. பெருந்துறை நாயகனுக்கு வேறு வழியே இல்லை. அவன் குடிபுக வேண்டுமானால் இவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி அந்தச் சிந்தையை தமக்குரிய ஊராகச் செய்துகொள்ள வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? முதலில் அந்த உள்ளத்தில் குடியிருந்த அஞ்ஞானமாகிய இருளை அகற்றினான். இந்த அஞ்ஞானம் இருக்கின்றவரையில் அதனோடு தொடர்புடைய துன்பம் இரட்டைப் பிறவிபோல் அங்கேயே குடியிருந்தது. இருளை அகற்றிய நாயகன் அந்தத் துன்பத்தை வேரொடு களைந்தான். வீட்டை இவ்வாறு தூய்மை செய்த பிறகு இருளிருந்த இடத்தில் ஒளிபுக வேண்டுமே! அதற்காகச் சோதி வடிவாக இருந்த தான் உள்புகுந்தான். அவன் வந்து அமர்ந்ததால் காய்ந்த கல்போன்றிருந்த நெஞ்சம் மென்மைத்தன்மை பெற்று அன்பை எங்கும் மலரச் செய்தது. அதன் பயனாகத் துன்பம் இருந்த இடத்தில் இன்பம் பெருக்கெடுத்தது (627). இத்தனையும் அடிகளார் நெஞ்சில் நிகழ்ந்தவை ஆகும். இவ்வளவு சிறப்பையும் செய்த பெருந்துறை நாயகன் அடிகளார் உள்ளத்தில் நிலையாகக் குடிபுகுந்துவிட்டான் 6ΤώδΤ&35.