பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_247 பண்டாய நான்மறை இத்தலைப்பிலுள்ள Η έβt) பாடல்களிலும் சில கருத்துக்கள் ஒரு தொடர்ச்சியுடன் பேசப்பெற்றுள்ளன. முதற்பாடல் (628) இந்த முறையில் அமையாமல், நான்மறைகளும், மால் முதலானவர்களும் காணமுடியாத அப்பரம்பொருள் திருப்பெருந்துறையில் எழுந்தருளி, தம்மைக் கூவியழைத்துப் பணிகொண்டதாகக் கூறுகிறார். 'கடையேனைத் தொண்டாகக் கொண்டருளும் கோகழி எம் கோமான்’ என்ற தொடரிலுள்ள நயத்தைக் காண்டல் வேண்டும். அவனோ கோகழிக்குக் கோமான். ஒரு கோமானிடம் தொண்டு செய்யவேண்டுமானால் தானாக அவனிடம் முண்டிக்கொண்டு சென்று ‘என்னை ஏற்றருள்க’ என்று சொல்லும் உரிமை அடிமைக்கு இல்லை. அவனுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவனாகவே பணியில் அமர்த்த வேண்டுமே தவிர வேறு வழியில்லை. அவனாகவே தேர்ந்தெடுக்கிறான் ஆதலின் அப் பணியாளர்கள் தகுதி மிக்கவர்களாய்ச் சிறந்த முறையில் பணியாற்றுவர் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தக் கோகழி நாயகன் செய்த வேலை மேலே சொன்ன முறையில் அமையவில்லை. அவன் ஏற்றுக்கொண்ட தொண்டராகிய தம்மைக் கடையேன்” என்று பேசுகின்றார். கடையேனை என்று தம்மைச் சுட்டியதால் அவரைத் தவிர ஏனையவர்கள் எல்லாம் முதல் நிலை, இரண்டாம் நிலையில் நிற்பவர்கள் என்பது தெரிகிறது. அவர்களையெல்லாம் விட்டுவிட்டுக் ᏜᎧᏈᏱᎥ_ᎥᏞJöᏡᎢfᎢē இருக்கும் ஒருவரை எவ்வாறு ஏற்றுக்கொண்டான்? ஒருவேளை தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இவர் அழுது மன்றாடி வேண்டிக்கொண்டாரா? அப்படியும் இல்லை. r