பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருவாசகம் சில சிந்தனைகள்-5 'கொண்டருளும்’ என்ற சொல் அவனே தேர்ந்தெடுத்தான் என்ற பொருளைத் தந்துநிற்கின்றது. 'புற்றுமாய் மரமாய்ப் புனல்காலே உண்டியாய்” உள்ளவர்களும் அண்டவாணரும் பிறரும் (399) மலரடி காணாமலே திகைக்க, அந்த மலரடி, கோகழி என்ற பெயருடைய திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் வந்தமர்ந்து என்ன காரியம் செய்தது தெரியுமா? மேலே காட்டிய யாரையும் ஏற்றுக்கொள்ளாமல் கடையேனைத் தொண்டு கொண்டது என்கிறார் அடிகளார். இதனை அவனுடைய எளிவந்த தன்மை என்று சொல்வதா? பயித்தியக்காரத்தனம் என்று சொல்வதா? இரண்டும்தான்! இப்படிப்பட்ட செயல்களைப் பலகாலமாகச் செய்துவருதலின் பித்தன் என்று ஒரு பெயர் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. பித்தன் என்ன செய்வான்? தன்னைப் போலவே பிறரையும் பைத்தியமாக அடிப்பான். இதனையே அடிகளார் பல இடங்களில் பித்து ஏற்றி என்று பாடுகிறார். அடிகளார் ஒருவரைமட்டுமா பித்தேற்றினான்? குதிரைச் சேவகனாக வந்து பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றினான்’ (649) என்கிறார். - இறையனுபவத்தில் மூழ்க்கித் திளைக்கின்றவர்களை இனம் கண்டுகொள்ளுதல் மிகமிக அரிதான காரியமாகும். எனவே, நம்மைப்போல் இல்லாமல் எதிர்த்திசையில் செல்லும் இவர்களைப் பார்த்துப் பித்தர்கள் என்று உலகோர் கூறுவது சகசமாக உள்ளது. பித்து என்று எனை உலகவர் பகர்வது ஒர் காரணம் இது கேளிர் (431) என்று தொடங்கும் பாடலில் அடிகளாரே இதற்கு விளக்கம் கூறியுள்ளார். - கருணையே வடிவான இறைவன் எல்லா உயிர்களுக்கும் கருணை பாலிக்கின்றான் என்பது பொதுநிலை. இவ்வாறன்றிச் சிறப்பாக ஒரு சிலரை ஒரே