பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_249 பிறவியில் முன்னேற்றிவிடுகிறான். பொதுநிலையில் உள்ள எல்லா மக்களும், பல பிறவிகள் எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இறுதியாக வீடுபேற்றை அடைகின்றனர். இவர்கள் கட்டை வண்டியில் பிரயாணம் செய்பவர்களைப் போன்றவர்கள் ஆவர். இதன் எதிராக, ஒரு சிலர், ஒலியைவிட வேகமாகச் செல்லும் சூப்பர் சானிக் (Supersonic) விமானத்தில் ஏறிப் பல்லாயிரம் மைல்களைச் சில மணி நேரங்களில் கடந்துவிடுவர். அருளாளர்களின் நிலை இதுபோன்றதுதான். இந்த அருளாளர்களை இறைவன் ஆட்கொள்வதில் பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்படினும் இரண்டு வழிகள் சிறப்பாகக் கருதப்பெற்றனவாகும். ஒன்று, இறைவன் குரு வடிவிலோ வேறு ஏதேனும் ஒரு வடிவிலோ இந்த ஒரு சிலரின் முன்னர்த் தோன்றி, திருவடி தீட்சை, நயன தீட்சை, மந்திர உபதேசம் என்பவற்றில் ஏதோ ஒன்றைச் செய்து இவர்களை முன்னேற்றுகிறான். இதன் எதிராக ஏதோ ஒர் உருக் கொண்டு எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரையும் சந்திக்காமல் அவன் தன் வழியோடு செல்கிறான். நூற்றுக்கணக்கானவர் அவ்வாறு செல்கின்றவனைப் பார்க்கின்றனர். அவர்களுள் யாரோ ஒருவர்மட்டும் வழியோடு செல்கின்ற உருவத்தைப் பார்த்தவுடன் குணங்குறி கடந்து நிற்கும் பொருள்தான் இந்த உருக்கொண்டு, இவ்வாறு செல்கிறது என்பதை உள்ளுணர்வு மூலம் உணர்ந்துகொள்கின்றார். மதுரையில் நடந்த கதை இதுதான். நூற்றுக்கணக்கான குதிரைகளும் அவற்றைச் செலுத்துபவர்களும் பின்தொடர, அவர்கள் தலவனாக இருப்பவன் தானும் ஒரு குதிரையின்மேல் அமர்ந்து தன் கால்களை அங்கவடியில் செருகிக்கொண்டு செல்கிறான். அவன். குறிப்பாக யாரையும் பார்க்கவில்லை. அரசன் உள்ளிட்ட அந்தப் பெருங்கூட்டம் அந்தத் தலைவனைக் குதிரைச்சேவகன்