பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 9 17 இப்படியல்லாமல் குருநாதர் வடிவிலிருந்த இறைவன் திருவடி நேரிடையாக அடிகளாரின் திருமுடிமேல்; சகஸ்ர தளத்தில், பதிந்த காரணத்தால் அதுவரை இயல்பாக இருந்துவந்த பசுத்தன்மையும் பாசமும் இப்பொழுது தலைதுாக்கவில்லை. இதனையே கதிக்கும் (சுண்டி மேல் எழுகின்ற பசு பாசம் ஒன்றும் இலோம் என்கிறார் அடிகளார். 'கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் என்ற தொடர் அமைந்துள்ள முறையில், ஒரு புதிய சிந்தனை ஒட்டம் ஏற்படுகின்றது. கதிக்கும்’ என்பதைப் பசு பாதத்திற்குப் அடைமொழியாக்கி, இவை எதுவும் தம்பாலில்லை என்று பொருள் காண்பது ஒருமுறை; அன்றி, பசுபாசம் என்பாலுண்டு! ஆனால் அவை அடங்கியுள்ளனவே தவிரக் கதிக்கும் நிலையொன்றும் இல்லை. அதாவது பசுத்தன்மையும் பாசமும் எம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளனவே தவிர, அவை மீதுார்ந்து எழும்நிலை இல்லை என்றும் பொருள் கொள்ளலாம். 566. இடக்கும் கரு முருட்டு எனப் பின் கானகத்தே நடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால் கடக்கும் திறல் ஐவர் கண்டகர்தம் வல் அரட்டை அடக்கும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 8 பாடலின் முதலிரண்டு அடிகள் அர்ச்சுனன் தவம் இயற்றும்கால் பெருமான் வேடுவனாகப் பன்றியை விரட்டிச் சென்ற கதையை நினைவுறுத்துகிறது. வேடுவனாக வடிவெடுத்துப் பன்றியை விரட்டிச் சென்றவன் இறைவனே ஆதலால் அந்தக் காட்டில் பெரும்பகுதி அவன் திருவடி பட்ட புண்ணியத் தலங்களாயின. அங்ங்ணம் விரட்டிச் சென்ற திருவடிகள்தான் குருநாதர் திருவடிகளாக வந்து தம்முடைய தலையின்மேல் அமர்ந்தன என்று மகிழ்கிறார் அடிகளார். *