பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_251 மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர் பலர்தில், வாழி - தோழி - அவருள், ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, ஒர் யான் ஆகுவது எவன்கொல். (அகநா:82) நூற்றுக்கணக்கானவர் இருக்கவும் தலைவி ஒருத்திக்கு மட்டும் மனமாற்றம் ஏற்பட்டதை இப்பாடல் தெரிவிக்கின்றது அல்லவா? அதேபோன்று ஆயிரக்கணக்கானவர் குதிரைச் சேவகனைப் பார்த்தாலும் அடிகளார் ஒருவருக்குமட்டுமே இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை அறிகின்றோம். இப்பரந்த உலகின் பெரும்பகுதி கடல்நீரால் சூழப்பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பகுதியை நாடு என்றும் காடு என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். காடாக இருந்த பகுதிதான் மனித முயற்சியால் நாடாக விளக்கம் பெறுகிறது. ஆனால், நாடாக மாறியவுடன் காட்டின் தொடர்பு முற்றிலும் அற்றுவிடுகிறது. ஆகவே இந்த மண்ணைக் காடு, நாடு, கடல் என்று மூன்றாகப் பிரிக்கிறார் அடிகளார். இம்மூன்றிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைமுறை வெவ்வேறாக உள்ளது. இந்த அடிப்படையை மனத்திற்கொண்டதுபோல் 630ஆம் பாடல் அமைந்துள்ளது. கயிலையை விட்டு மண்ணிடை வந்த பெருமான் காட்டில் வேட்டுருக் கொண்டு சில அற்புதங்கள் நிகழ்த்தினான்; அதே பெருமான் குதிரைச் சேவகனாக வந்து தன்னைக் கண்டவர்களையெல்லாம் பயித்தியமாக அடித்தான்; அதே பெருமான் வலைஞனாக வடிவேற்று வலை வீசினான் என்று பேசுகிறார். இந்த உண்மையைத்தான் காட்டகத்தே வேடன், கடலில் வலை வாணன், நாட்டிற் பரிப்பாகன் (630) என்கிறார் அடிகளார். இந்த மூன்று இடங்களிலும் மானிட உருத் தாங்கி அற்புதங்களை நிகழ்த்துகிறான் பெருமான். அது ஏன்? மூன்று இடங்களிலும் வாழ்கின்றவர்கள் வெவ்வேறான