பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 0 திருவாசகம் சில சிந்தனைகள்-5 மனநிலை உடையவர்கள். காட்டிலும் கடலிலும் அந்த அந்தப்பகுதி மக்களுள் தானும் ஒருவனாக ஏன் மாறினான்? ஒரு துறவியாக இருந்து காட்டிடை எதனைச் செய்தாலும் அங்கு வாழும் மக்கள் அதனைக் கண்டு ஆனால், வேடனாக இருந்து எதனைச் செய்தாலும் அந்த வேட்டுவர்கள் இவனைத் தம்முள் ஒருவனாகக் கருதி நெருக்கம் கொள்வர். மக்கள் மேற்கொள்ளும் இந்த நெருக்கத்தைத்தான் இறைவன் விரும்புகிறான். ஆதலின், அந்தந்தப் பகுதி மக்களுக்கு ஏற்றமுறையில் காட்டிடை வேடனாகவும், நாட்டிடைக் குதிரைச்சேவகனாகவும், கடலிடை வலைஞனாகவும் வந்தான் என்பதை அறிதல் வேண்டும். இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் இருவகைப்படுவர். விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலர் அவன் திருவடி நீழலை அடைவதைத் தவிர வேறு எதனையுைம் வேண்டமாட்டார்கள். மிகமிகப் பலர் இம்முறையிலிருந்து மாறுபட்டவர்கள். இந்த உலகத்தில் எல்லாவித சுக போகங்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே நேரத்தில் தம்மைப் பிறர் போற்றிப் புகழ்ந்து வணங்கவேண்டும் என்றே விரும்புவர். - நான்காம் பாடலில் (631) அடிகளார் இந்த இரண்டாவது வகையினர்க்கே சிலவற்றைக் கூறுகிறார். திருப்பெருந்துறையில் சென்று பெருந்துறை நாயகனை வழிபட்டவர்கள், வாழ்ந்தார்கள் ஆவர். அதாவது இந்த உலகத்தில் எல்லா நலங்களையும் அனுபவித்துக்கொண்டு எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தவர்கள் ஆவர். சாதாரண வாழ்க்கை வாழும் சராசரி மனிதன்கூடத் தன்னிடம் எவ்விதத் தகுதியும் இல்லாவிட்டாலும் நான்கு பேர் தன்னைப் போற்றவேண்டும் என்று நினைப்பது