பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_253 உலகியற்கை. இதனை மனத்துட் கொண்ட அடிகளார் ‘வாழ்ந்தார்கள் ஆவார்’ என்று கூறியதோடு நிறுத்தாமல் ‘உலகம் தாழ்ந்து ஏத்தும் தகுதியைப் பெறுவார்கள் என்றும் கூறினார். - மேலே கூறிய இரண் நலன்களும் இவ்வுலகிடைப்பட்ட நலன்களாகும். பெருந்துறை நாதனை வழிபட்டவர்க்கு இவை இரண்டுமட்டுந்தான் கிட்டுமா என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, சுகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் போதேகூட வல்வினையை மாய்க்க அவர்களால் முடிகிறது என்ற கருத்தையும் பேசுகிறார். நாயகனை வழிபட்டால் இம்மை, மறுமைப் பயன்கள் முழுவதும் கிட்டும் என்க. மற்றொரு வகையாகக் கூற வேண்டுமானால், இத்தமிழ்நாட்டுக்கே உரிய ஒரு தனிச்சிறப்பை இப்பாடல் கூறுகிறது. வல்வினையை மாய்க்க வேண்டுமானால் காடுகள் சென்று, கன சடை வைத்து, புற்றுமாய் மரமாய் நின்று, காற்றையும் தண்ணிரையும் ஆகாரமாக உட்கொண்டுதான் அதனைச் செய்யமுடியும் என்று கூறுவோர் கூற்றை மறுத்து இந்த அருளாளர்கள் பாடினர். ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை’ (திருமுறை :3-24-) என்று காழிப்பிள்ளையார் பாடியதும் இக்கருத்தையே வலியுறுத்தும். இதே கருத்தை வலியுறுத்திச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் - இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கு * யாதும் ஐயுறவில்லையே (திருமுறை :7-34-1) என்று பாடியுள்ளார்.