பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254--திருவாசகம் சில சிந்தனைகள்-5 பண்டாய நான்மறையின் ஐந்தாம் பாடலிலும் (632) கோகழி என்ற சொல் அமைந்துள்ளது. திருவாசகத்தில் கோகழி என்ற சொல் மூன்று இடங்களில் இடம்பெறுகிறது. உரை எழுதிய பலரும் எங்கெங்கோ இருக்கின்ற திருப்பதிகளுள் கோகழியும் ஒன்று என்று எழுதிப் போயினர். யோக முறையில் பொருள் எழுதியவர்கள் ஆறு ஆதாரங்களில் விசுத்தி என்ற இடமே கோகழி என்றெல்லாம் எழுதிப்போயினர். ஆனால், திருப்பெருந்துறைக்கு இது மற்றொரு பெயர் என்பதை முதன் முதலில் கூறியவர் அமரர் அருணைவடிவேல் முதலியார் அவர்களே ஆவர். இக்கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஆகும். ஆறாம் பாடலில் 633 வரும் காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார்’ என்ற பகுதியை ஆழ்ந்து சிந்தித்தாலொழிய விளங்கிக்கொள்வது கடினம். 'கானும் கரணம்’ என்ற சொற்கள் ஐம்பொறிகளையும் அந்தக்கரணங்கள் நான்கினையும் புலப்படுத்தி நிற்கின்றன. பொறிகளும் கரணங்களும் ஏதோ ஒன்றைப் பற்றி நின்று தொழிற்படுகையில் அதன் பயனாக இன்பம் அல்லது துன்பம், மகிழ்ச்சி அல்லது துயரம் ஏற்படுகின்றது. 'நான் என்ற ஒன்று வலுவாக ஒருவரைப் ற்றியிருக்கின் பில் இந்த இன்ப துன்ப அனுபவங் ஏற்று அனுபவிக்காமல் இருக்க முடியாது. ஆழ்ந்த மயக்கம் முதலியவற்றால் இந்த நான் தொழிற்படாமல் மடங்கிவிடும் பொழுது உடல் எந்தத் தொடுஉணர்ச்சியையும் அனுபவிப்பதில்லை. ஏனைய பொறிகளும் தொழிற்படுவதில்லை. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். நான் நானாகத் தொழிற் படும்போதுதான் கருவி கரணங்கள் செயற்பட்டு இன்ப துன்பங்கள் அனுபவிக்கப்படுகின்றன. மயக்க நிலையில் நான் தொழிற்படாமையால் இவை நடைபெறுவதில்லை.