பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை $ 255 இவை அனைத்தையும் கடந்த நிலை ஒன்றுள்ளது. அந்த நிலையில் நான் தொழிற்படுகின்றதேனும் அது பழைய நானாக இருப்பதில்லை. அதற்குப் பதில் இறையனுபவத்தில் தோய்ந்து எழுவதால் இந்த நானின் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது. அப்பொழுது பொறி, புலன்கள் மூலம் அனுபவிக்கப்படும் எல்லா அனுபவங்களும் எல்லையற்ற ஆனந்தத்தைத் தருகின்றன. இப்பொழுது அந்த 'நான் முற்றிலும் மாறி, இறையுணர்வோடு கலந்து விட்டமையின் பொருட்களை வேறுபடுத்திக் காண்பதில்லை. அப்படியானால் இந்த நிலையை அடைந்து விட்டவர்களின் கண்கள் பொருள்களைக் காணாவா, பொருள்களின் இடையேயுள்ள வேறுபாட்டைக் காணாவா என்ற வினாத் தோன்றினால் விடையிறுத்தல் எளிது. வேறுபட்ட பொருட்களைக் காணும் இவர்கள் அவற்றினுடே ஊடுருவி நிற்கும் ஒன்றையும் காண்கிறார்கள். தாயுமானவர் நந்தவனம் சென்று மலர்களைப் பறித்து இறைவனை வழிபடவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சென்றார். மலர்கள் பூத்துக் குலுங்கின. ஏதோ மலரைப் பறிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அருகே செல்கிறார். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மலர் என்றுதான் அதனிடம் சென்றார். தூரத்திலிருந்து பார்க்கும்போது மலராகத் தெரிந்த அது, அருகிற் சென்று பார்க்கும்போது மலரை ஊடுருவி நிற்கும் ஒன்றையும் காட்சிக்கு நல்கியது. அதனையே தாயுமானவர், பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்' (தாயு:கருணாகர-6) ஒன்று பாடுகிறார். நான் "தற்போத நானாக இல்லாமல் இறையனுபவத்தில் தோய்ந்த நானாக மாறும்பொழுது, மலரூடு . அவன் இருப்பதைக் காணமுடியும். இந்த நிலையில் இருப்பவர்களுக்குப் பொருட்களின் இயல்புகள் தட்டுப்படுவதில்லை.