பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256-0-திருவாசகம் சில சிந்தனைகள்-5 திருமாவிடத்துப் பேரன்பு பூண்டு அவன் வயப்பட்ட பெண்ணின் செயல்களை நம்மாழ்வார் இதோ பாடுகிறார்: ‘மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்: (நாலாயிரம்: 2477) என்றும், அறியும் செந்தீயைத் தழுவி, அச்சுதன் என்னும், மெய்வேவாள் எறியும் தண் காற்றைத் தழுவி, என்னுடைக் கோவிந்தன் என்னும் (நாலாயி :2449) என்றும் பாடியுள்ளமையைக் காணலாம். இப்பெண் இது செந்தி என்பதை அறிவாள். அறியும் என்ற சொல்லால் இதனை அறிவிக்கின்றார். செந்தியென்றுமட்டும் அறிந்திருந்தால் இது சுடும் என்பது விளங்கியிருக்கும். ஆனால், செந்தீயைத் தழுவுகிறாளே இவள்! அந்தச் செந்தி இவளைச் சுடவில்லை என்கிறாரே ஆழ்வார்! இதன் உண்மை என்ன? செந்தியைச் செந்தீயாகமட்டும் காணாமல், ஊடுருவி நிற்கும் அச்சுதனை அல்லவா அதனுள் அவள் காண்கிறாள். அதனாற்றான் தீ சுடவில்லை என்பதை மெய் வேவாள் என்ற தொடரால் குறிப்பிட்டார். புதுச்சேரியில் வாழும் காலத்தில் குள்ளச்சாமியின் கருணையால் இந்த நிலையை அடைந்துவிட்ட மகாகவி பாரதி இதோ பாடுகிறான்: - தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா (பாரதியார் பாடல்கள். தமிழ்ப்பல்கலைக்கழகப் - பதிப்பு: 236) என்று பாடிய அவன், மற்றொரு பாடலில் இதற்கு ஒரு விளக்கமும் தருகிறான். தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள் அவளைக் கும்பிடுவாய் - (1882) என்ற பாடலில் இப்பெருமக்களுக்கு பொறிபுலன்களால் வரும் அனைத்து அனுபவங்களும் பேரின்பத்தையே