பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_257 விளைக்கின்றன என்பதை அறிவுறுத்துகின்றான். இந்த காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார்’ என்ற தொடரின் பொருளை விளங்கிக்கொள்ள முடியும். திருப்பெருந்துறை என்பது ஒர் ஊர். இறைவன் உறையும் தலம் என்று எடுத்துக்கொண்டாலும் இதுபோன்ற தலங்கள் தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அப்படியிருக்க, பெருந்துறை நாயகன் என்று சொல்லிப் பிறப்பு அறுத்தேன் என்று சொல்லியிருந்தால் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அவ்வாறில்லாமல் பெருந்துறையே என்று சொல்லிப்) பிறப்புறுத்தேன்’ (634) என்று அடிகளார் கூறுவது என்ன பொருளில் பேசப்பட்டது? இலக்கணத்தில், இடத்து நிகழ் பொருளின் பெயர் இடத்துக்கே ஆவது என்பது ஆகுபெயரின் ஒரு பகுதியாகும். அதேபோன்று பெருந்துறை நாயகன் என்பது பெருந்துறை என்றே குறிக்கப்பெற்றது. அல்லாமலும் பெருந்துறை என்ற ஊரில்தான் இவருடைய வாழ்க்கை திசைமாறிற்று; எனவே, தமது வளர்ச்சிக்கு மூலமான அந்த இடத்தை அடிகளார் போற்றிப் புகழ்வது பொருத்தமேயாகும். அன்றியும் பெருந்துறை என்ற பெயர் அந்த ஊரிலுள்ள நிலம், மண், மரம், செடி, குளம் என்பவற்றைக் குறிக்காமல் பெருந்துறை நாயகனையே குறித்துள்ளது. எனவே, அடிகளார் பெருந்துறையே என்று சொல்லிப்) பிறப்புறுத்தேன் என்பது நியாயமேயாகும். ஏழு பாடல்களுடன் உள்ள இப்பகுதியில் 'நெஞ்சே வாழ்த்து (630) என்றும், அவனைக் காண் (632) என்றும், 'நெஞ்சே! வாயாரப் பேசு (633) என்றும் வருவதால் கண், வாயாகிய இரண்டு பொறிகளுக்கும் தக்க பணியைக் கொடுத்தாராயிற்று. இப்பகுதியின் இரண்டாம், மூன்றாம்