பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258_திருவாசகம் சில சிந்தனைகள்-5 பாடல்களில் ‘வாழ்த்துமின்கள் என்றும் 'நெஞ்சே வாழ்த்து என்றும் வருதலைக் காணலாம். வாழ்த்துதல் என்ற தொழிலைச் செய்கின்ற உறுப்பு வாய் என்பதனை அனைவரும் அறிவர். பல சமயங்களில், நெஞ்சின் ஆழத்தில் உணர்வு நிறையாமலுங்கூட வாழ்த்துதல் நடைபெறுவதை இன்றும் காண்கிறோம். பழக்கவசத்தாலோ, அன்றி, உடனிருப்பவர்கள் நீங்களும் வாழ்த்துங்கள் என்று சொல்லும்பொழுதோ உணர்வுக் கலப்பின்றி இவ்வாழ்த்து நடைபெறுகின்றது. இறைவன் நாமத்தை, அவன் தமக்குச் செய்த பேருபகாரத்தைப் பலமுறை வாழ்த்தும் இயல்புபெற்றவர்கள் நெஞ்சக்கலப்பு இல்லாமல் இவ்வாழ்த்தலைச் செய்தலும் கூடும். பழக்கத்தால் வரும் அத்தகைய வாழ்த்தலுக்கும் இறைவன் அருள்புரிவான் என்று இந்நாட்டவர் நம்பினர். 'நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே! (திருமுறை 7:48-1) என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பழக்கவசத்தால் இச்செயல் நடைபெறுவதைக் குறித்துச் செல்கிறது. அடிகளார் ‘வாழ்த்து’ என்று சொல்லும்பொழுது இந்த நிலை வரக்கூடாது என்று எண்ணினார் போலும். அதனாலேயே வாழ்த்து பேசு’ என்று வரும் இரண்டு இடங்களிலும் (630,633) நெஞ்சை உடன்சேர்த்து நெஞ்சே வாழ்த்து' என்றும் 'நெஞ்சே வாயாரப்பேசு' என்றும் கூறுகிறார். - 629ஆம் பாடலில் ‘வாழ்த்துமின்கள் என்று உடனிருப்போரை நோக்கி ஆணையிட்ட அடிகளார் அடுத்துவரும் பாடல்களில் நெஞ்சை உடன்சேர்த்துப் பேசுவதிலும் ஒர் அடிப்படை உண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வாழ்த்துமின்கள்’ என்று ஆணையிட்டார்; அவர்களும் வாழ்த்தினார்கள்; ஆனால் அவர்களின் அந்த வாழ்த்தொலி உள்ளீடற்றதாய், நெஞ்சக்கலப்பற்றதாய் அடிகளாருக்குத் தோன்றியிருக்கும் போலும், நெஞ்சோடு