பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை © 259 கலந்துதான் வாழ்த்தலும் பேசலும் இருக்கவேண்டும் என்பதை நேரே அவர்களுக்கு எடுத்துச்சொல்லாமல், தமக்கே கூறிக்கொள்வதுபோல நெஞ்சே, வாழ்த்து என்றும் 'நெஞ்சே, பேசு' என்றும் பேசுகிறார். எதிரே உள்ளவர்களை முன்னிலைப்படுத்தி வாழ்த்துமின்கள்’ என்று கூறிய அவர், பின்னர் உள்ள இரண்டு பாடல்களில் தம்முடைய நெஞ்சையே முன்னிலைப்படுத்திப் பாடுவதன் காரணம் இதுவாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது. பாடல்கள் அந்தாதித்தொடையாக இருத்தலின் இந்த வரிசைமுறை மாறுபட்டிருக்க நியாயமில்லை. இறைவனைப் பற்றிய புகழ்மொழியாக இருப்பினும் அது நெஞ்சத்துணர்வு கலந்து வெளிவரும்பொழுது என்ன நிகழும் என்பதை திருவெம்பாவையின் முதற் பாடலில் (155 அடிகளார் கூறுகிறார். மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்த் தெரு முழுவதும் நிரம்பிற்று. அதனைக்கேட்ட ஒருத்தி உறக்கத்திலிருந்து விழிக்கும் நிலையிலிருந்தாள். இந்த வாழ்த்தொலி வீட்டின் புறத்தே வீதியில் ஒலித்தது; இவளைக் குறித்தோ இவளுக்காகவோ அது ஒலிக்கவில்லை. அதனைக் குறிக்கவே வீதிவாய்க் கேட்டலுமே என்றார். அவ்வொலி இவளைக் குறிக்காவிடினும் உணர்வு நிறைந்து வெளிப்பட்டதாதலின் அதனைக் கேட்ட இவள் விம்மினாள்; மெய் மறந்தாள்; ஏதேனும் ஆகாளாய்க் கிடந்தாள் என்பதால் அவள் சமாதி நிலையை அடைந்தாள் என்பதைக் குறித்தாராயிற்று. பகவான் இராமகிருஷ்ணர் வரலாற்றில் இதனை நன்கு அறியமுடியும். எதிரே உள்ளவர்கள் உள்ளத்துணர்வு நிறைந்து நாமாவளியைப் பாடினால் இராமகிருஷ்ணருக்கு உடனே சமாதி கூடிவிடும். நாமாவளி பாடுகின்றவர்கள் தம்மை மறந்து பாடினரே தவிர, இராமகிருஷ்ணரை நோக்கிப் பாடவில்லை. ஆனால், அது நெஞ்சோடு கலந்து