பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருவாசகம் சில சிந்தனைகள்-5 வைக்கப்பட்ட திருவடிகள் அடிகளார் தலைமேல் சில விநாடிகளே இருந்தன என்றாலும், அத்திருவடிகள் செய்த மாபெரும் காரியத்தை மூன்றாம் அடியில் பேசுகிறார் அடிகளார். - - மிக்க் கொடியவர்களாகிய கண்டகர்) ஐந்து பொறிகளும் தீங்கிழைக்கும் குறும்புச்செயல்கள் (வல்அரட்டை) பலவற்றையும் செய்து, தம்மை உடையவனை அருநரகில் தள்ளும் இயல்புடையன. அந்த ஐவரையும், தலைமேல் வைக்கப்பட்ட திருவடி, ஒரே விநாடியில் செயலிழக்கச் செய்தது. 567. பாழ்ச் செய் விளாவிப் பயன் இலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டுத் தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு என் புன் தலையால் ஆட் செய் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 9 ‘பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேன்’ என்பதுவரை ஒரு தொடராகும். விளாவி’ என்பது உழுதல் என்ற பொருளை உடையது. ‘செய்” என்பது பதப்படுத்தப்பட்ட விளைநிலம் என்ற பொருளையுடையது. ‘பாழ்ச்செய்' என்பது இயல்பும், தரமும் கெட்டுப்போன விளைநிலமாகும். அதாவது பாழாகிப்போன விளைநிலம். இந்த நிலத்தை எவ்வளவு உழுது பயன்படுத்தினாலும் அது எதற்கும் உதவாமற் போய்விடுகிறது. 'அதுபோல எத்தனையோ பெரியவர்கள் என்னை முன்னேற்றுவதற்கு எவ்வளவோ பாடுபட்டும், அந்தப் பாழாய்ப்போன நிலம்போல எவ்விதப் பயனையும் விளைவிக்காமல் கிடக்கின்றேன்' என்பது இத்தொடரின் பொருளாகும். கீழ்ச்செய் தவத்தால் கிழியீடு நேர்ப்பட்டு’ என்பது இரண்டாவதாக உள்ள தொடராகும். பாழாய்ப்போன நிலம்போலப் பயனிலியாய்க் கிடந்த தமக்கு எதிர்பாராத ஒர் அதிர்ஷ்டம் சித்தித்தது என்கிறார் அடிகளார்.