பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருவாசகம் சில சிந்தனைகள்: வந்தமையின் திருவெம்பாவையில் வரும் பெண்ணையும் இராமகிருஷ்ணரையும் சமாதியில் ஆழ்த்திவிட்டது. தம் அனுபவ ஞானத்தால் இதனை அறிந்த அடிகளார் வாழ்த்து என்ற சொல்லின் முன்னரும் பேசு' என்ற சொல்லின் முன்னரும் 'நெஞ்சு என்ற சொல்லைச் சேர்த்ததால் இந்த அருமைப்பாட்டை விளக்கினாராயிற்று. தம்முடைய தகுதிபாராது, தன் கருணை ஒன்றே காரணமாக இறைவன் ஆட்கொண்டான் என்று நினைந்து நன்றிப் பெருக்கில் விம்முகின்றார் அடிகளார். நல்ல பண்புடையார் நன்றி மறப்பதில்லை அல்லவா? எனவே, தம்பொருட்டு இவ்வளவு அரும் பெரும் செயல்களைச் செய்தவனுக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும் என்று ஆதங்கப்படுகிறார். அதனையே முதற் பாடல் உண்டாமோ கைம்மாறு உரை (628) என்று பேசுகிறது. திருப்படையாட்சி இறைநம்பிக்கையுடைய எல்லாச் சமயத்தினரும் அவரவர்கள் கருதும் கடவுள் இந்த உலகத்தை உய்விப்பது கருதி இறைத் தூதர்களை இவ்வுலகிடை அனுப்புகிறான் என்ற கொள்கையில் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நாட்டில் தோன்றிய மிகப் பழைய சமயங்களாகிய சைவம், வைணவம் இரண்டும் இறைத் துரதர் என்று யாரையும் தனிப்படக் கருதியதோ கூறியதோ இல்லை. இறைவனிடம் மகன்மை உறவுபூண்டு அதனை வெளிப்படையாகவும் கூறிய ஒரு சில அருளாளர்கள் சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் உளர். வைணவ சமயத்தில் நம்மாழ்வாரும், சைவ சமயத்தில் திருஞானசம்பந்தரும் தாங்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம் தங்கள் மூலமாக இறைவன் பேசும் பேச்சுக்களேயாகும்