பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_261 என்பதை வெளிப்படையாகக் கூறியுள்ளதை முன்னரும் எடுத்துக்காட்டியுள்ளோம். அன்றியும் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்' என்று காழிப்பிள்ளையார் தம்மைக் கூறிக்கொள்வதை அவருடைய தேவாரத்தில் காணலாம். மற்றொரு சமயத்தார் தங்கள் சமயத்தைத் தோற்றுவித்தவர் இறைவனுடைய ஒரே பிள்ளை என்று கூறிக்கொள்வதும் ஒப்பு நோக்கத்தக்கது. இந்த அருளாளர்கள் அனைவரும் தத்தம் காலத்தில் தங்களுடைய பாடல்களாலும் நிகழ்த்திய அற்புதச் செயல்களாலும் தங்கள் கொள்கையை வலியுறுத்திப் போயினர். சைவம், வைணவம் ஆகிய இரண் சமயங்களும் என்று தோன்றின என்று தெரியமுடியாத பழைமையுடையன. அப்படியானால் அந்தப் பழைய சமயங்களில் புதிதாகத் தோன்றிய இந்த அருளாளர்கள் எதனை நிர்மாணித்தார்கள் என்ற வினாத் தோன்றுமேயானால் அதற்கு விடை கூறுவது ஒருவகையில் எளிதாகும். வேத காலத்திலும் அதனை அடுத்த காலத்திலும் சடங்குகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. சில மந்திரங்களை ஒதி, யாகத் தீ வளர்த்துப் பலியிடுவதாலேயே தேவருலகத்தை அடைய முடியும் என்று அவர்கள் கருதினர். வாஜபேயம் முதலாக இருபத்தொருவகை யாகங்கள் பெரிதாக வளர்ச்சியடைந்தன. அரசர்கள் பலரும் இவ்வகை யாகங்களைச் செய்வதன்மூலம் பகையை வெல்ல முடியும், தேவருலகம் செல்ல முடியும் என்ற கருத்தில் இந்த யாகங்களில் பெரிதும் ஈடுபட்டனர். நாளாவட்டத்தில் இந்த யாகங்களின் அடிப்படைத் தத்துவம் மறைந்து, வெறும் சடங்குகள்மட்டும் மிஞ்சிவிட்டன. இந்த நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதியில் தோன்றிய வேதவழக்கொடுபட்ட வைதிக சமயம்,