பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_253 இவர்கள் தமிழர்கள் அல்லர் தமிழ் மொழியை வெறுப்பவர்கள். அதனால் இந்த மூன்று நூற்றாண்டுகளில் சிறந்த தமிழிலக்கியம் எதுவுமே தோன்றவில்லை. இவர்கள் 'கொல்லாமை மறைந்து உறையும் மக்கள் ஆதலின் பாண்டி நாட்டிலோ பல்லவ நாட்டிலோ பெருந்திரளாக மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் வாழ முடியவில்லை. அரசனை மட்டும் கைக்குள் போட்டுக்கொண்டு மதுரையை அடுத்த ஆனைமாமலை போன்ற இடங்களில் இவர்கள் தங்கி வாழ்ந்தனர். ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர்கள் செல்வாக்குப் பெரிதும் குறையலாயிற்று. வீழ்ந்து கிடந்த சைவத்தைத் துக்கி நிறுத்த முன்வந்தார் நாவரசர் பெருமான். அதன் பயனாகச் சமணனாக இருந்த மகேந்திர மன்னன் áFF)&g=6YjGsf ff'ðš; மாறினான். அதேபோலப் பாண்டியனும் ஞானசம்பந்தரால் மறுபடியும் சைவனாக மாறினான். இந்த நிலையில் பிற சமய வழக்கொழிந்து சைவமும் வைணவமும் துளிர்க்கலாயின. இப்புதிய துளிர்ப்பு சைவ, வைணவங்களை வளர்ப்பதற்கு ஒரு புதுவழியைக் கையாண்டது. சடங்குகளுக்கு அதிக இடந்தராமல், பக்தி ஒன்றையே அடித்தளமாகக் கொண்டு, இவ்விரு சமயங்களும் வளர்க்கப்பெற்றன. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவுவரை இரண்டரை நூற்றாண்டுகள் மூவர் முதலிகள், ஆழ்வார்கள் ஆகியோரின் வழிகாட்டுதலில் சைவமும் வைணவமும் ஒகோ என்று வளர்ந்தன. திருக்கோயில்கள் பல்கிப் பெருகின. யார் வேண்டுமானாலும் கோயில் உட்சென்று மூலவருக்கு அபிடேகம், அர்ச்சனை முதலியவற்றைத் தாமே செய்யலாம் என்ற நிலை ஏழாம் நூற்றாண்டிலும் இந்நாட்டில் பரவியிருந்தது என்பதைச்