பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருவாசகம் சில சிந்தனைகள் 5 செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழுநற் கலை தெரிந்தவரோடு அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர். (திருமுறை: 3.80.4) என்ற திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியமுடிகிறது. யாவரும் சென்று நேரிடையாக அருச்சனை செய்யலாம் என்பதை இப்பாடல் விளக்குகிறதல்லவா? இதுவே ஒன்பதாம் நூற்றாண்டு முடிய தமிழகத்தில் பரவியிருந்த பக்தி இயக்கமாகும். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மணிவாசகப் பெருமான் தோன்றுகிறார். அவருக்கு ஒரு நூற்றாண்டு முற்பட்டுத் திருமூலர் தமிழ்நாட்டில் நுழைகின்றார். இப்பெருமக்கள் இருவரும், பக்தி இயக்கத்திற்கு ஒரு புதிய வழியை வகுத்துவிட்டனர். பக்தி இயக்க காலத்தில் சைவம், வைணவம் இரண்டிலும் குரு அல்லது ஆச்சாரியன் என்ற ஒருவருக்கு இடமேயில்லை. திருமூலர்தான் குரு என்றதொரு தத்துவத்தை தமிழகத்தில் முதன்முதலில் புகுத்தினார். முதல் குருவுக்கு நந்தி என்ற பெயர் கொடுத்து அதனை இறைவன்பெயர் என்றே திருமூலர் கூறிச்சென்றார். தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் (திருமந்திரம்139) என்ற முறையில் முதன்முதலில் பாடியவர் திருமூலரே ஆவார். குருவின் துணை கொண்டுதான் முன்னேறி உய்கதி அடையமுடியும் என்ற புதிய கருத்து, சைவத்தில் புகுத்தப்பட்டது. ஆனால், எவ்வளவுதூரம் பரவிற்று என்று சொல்வதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. குரு என்ற தத்துவத்தைப் புகுத்தியதோடு நில்லாமல், அதுவரை சைவத்தில் இடம்பெறாத சக்கரங்களையும் (யந்திரங்களையும்) அவற்றுள் பொதிந்துள்ள