பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256-திருவாசகம்-சில சிந்தனைகள்-5 கூறினார் அடிகளார். இரண்டாம் பாடலில் (635) இனம் கண்டுகொண்ட பிறகு அவன் தன்னுள்ளே புகுவதால் என்ன நிகழும் என்பதை மிக அற்புதமாக விளக்குகிறார். ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் உயிர், உடம்பு, கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் ஆகியவை தனித்தனியாகப் பணிபுரிகின்றன. இவை ஒன்றுக்கொன்று இணங்கிப்போவதில்லை. வாழ்க்கை முழுவதும் முரண்பாடே நிறைந்துநிற்கும். ஆனால், ஏறுடையான் எனை ஆளுடை நாயகன் உள்ளே புகுந்துவிட்டால் மேலே கூறிய பன்னிரண்டும் தொழிற்படாமல் வீழ்ந்துவிடும் (உயிர்பு அறும் என்றார். அதன்பிறகு நடைபெறுவனவற்றை முன்னும் பின்னுமாக பாடல் முழுவதிலும் கூறினார். மூன்றாவது பாடலிலும் (637) நாயகன் எதிர்ப்பட்ட போது தம்முள் நிகழ்ந்த ரசவாதங்களை எடுத்துப் பேசுகிறார். நான்காவது பாடலில் (638) ஆளுடையான் எதிர்ப்பட்டபோது நிகழும் ஒரு மாபெரும் மாற்றம் பேசப்பெறுகிறது. மாதர் தொடக்கு எளிதில் அற்றுவிடும் ஒன்றன்று. எத்தனை யோகப் பயிற்சியிலும், பக்தி முன்னேற்றத்திலும் திடீரென்று மனத்திடைத் தோன்றி பரமதப் படத்தின் பாம்புபோல இந்தப் பாலுணர்வு ஒருவரைப் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடும். ஆளுடையான் எதிர்ப்பட்டு, அவனுக்கு அடிமையாகிவிட்டால் மாதர் தொடக்குப்பற்றிய நினைவு அற்றுப்போகும் என்ற எதிர்மறைப் பொருளில் ‘என்னணியார் முலை ஆகம் அளைந்துடன் இன்புறுமாகாதே’ என்று பாடுகிறார். இந்தத் தொடரில் வரும் ஆகாதே’ என்ற சொல்லுக்கு முன்னர்ப் பொருள் கண்டதுபோல ஆகும் என்று பொருள்கொண்டாலும் தவறில்லை. நாயகன் உட்புகுந்து, அவனுக்கு அடிமையாகி விட்டால் மகளிர் இன்பம் துய்த்தல் அதற்கு முரணாகாமல்