பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_287 இருக்கும் என்பதைச் சுந்தரர் போன்ற பெருமக்களின் வாழ்க்கை அறிவுறுத்துகின்றது. ஆதலின், ஆகும் என்று உடன்பாட்டுப் பொருள்கொள்வதிலும் தவறில்லை. ஐந்தாம் பாடலில் (639) மாலறியா மலர்ப் பாதம் வணங்குவதும் ஆகும் என்கிறார். இது எப்பொழுது? அருளுடையவனும் எனை ஆண்டவனுமாகிய இறைவன் வெளிப்படுகிறான். அந்நிலையில் அவனுடைய திருவடிகள் திருமாலாலும் அறியப்படாதவை என்பதைத் தெரிந்துகொண்டு, அந்தத் திருவடிகளை வணங்கினால் ஒரே நேரத்தில் பல பேறுகள் சித்திக்கும். மண்ணிடைத் தோன்றும் மனமயக்கம் அறுபடும் என்பது முதலான பல நிலைகள் கைகூடும் என்பதைச் சொல்லிவந்த அடிகளார், எண்ணிலி ஆகிய சித்திகள் தாமே வந்து தம்மை அடையும் என்று பாடுகிறார். பொதுவாக அட்டமா சித்திகள் என்று கூறுவதுதான் மரபு. ஆனால், அடிகளார் எண்ணிலி ஆகிய சித்திகள் என்று கூறுவதைக் கவனித்தல் வேண்டும். நான்கு வேதங்கள் என்று கூறப்பெற்றாலும் எண்ணிலி வேதம் சொன்னார்’ என்று தேவாரம் பாடிச்செல்கிறது. அடிகளார் போன்ற அருளாளர்கள் இந்தச் சித்திகள் முதலானவற்றைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை. சித்திகளை இவர் தேடிச்செல்லாமல் இருக்கும்போதே அவை தாமாகவே வந்து தம்மை அடையும் என்கிறார். பொறி, புலன்கள், மனம் ஆகியவை இந்த ஆன்மாவிற்குக் கிடைத்த படைகள் என்று முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். இந்தப் படைகள் தறிகெட்டுப் போகாமல் அவற்றை ஆளும் திறம் பெற்றுவிட்டால் மால் அறியா மலர்ப்பாதத்தை வணங்குவதற்குரிய வழி தெரியும். அந்த வழியிற் சென்றால் உலக மயக்கம் தெளிதல் முதல், எண்ணரிய சித்திகளும் ஒருவரை வந்து அடையும். இதில் ஒரு வேடிக்கை அமைந்துள்ளது. இந்தச் சித்திகளை அடையவேண்டுமென்று ஊண் உறக்கம் தவிர்த்து,