பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268-திருவாசகம் சில சிந்தனைகள்-5 மாபெரும் தவம் இயற்றுவோர் மிகப் பலராவர். அவர்கள் எடுத்த பிறப்பின் முடிவிற்கூடச் சித்திகள் வந்தனவா என்றால் உறுதியாக ஆம் என்று சொல்வதற்கில்லை. ஆப்பிள் பழத்தை வரவழைத்தல் போன்ற யட்சிணி வித்தைகளையெல்லாம் சித்திகள் என்று சொல்வது மிகத் தவறானதாகும். இங்கு அடிகளார் குறிப்பிடும் எண்ணிலியாகிய சித்திகள் யட்சிணி வித்தைக்கு முற்றிலும் மாறுபட்டவை. இப்பதிகத்தின் நிறைவுப்பாடலில் (642) உள்ள சிறப்பு முதலடியிலேயே உள்ளது. ஆதி நாதத்தின் ஒலியை அருளாளர்கள்மட்டுமே கேட்கமுடியும். அப்படிக் கேட்ட அருளாளர்கள் யாரும் அது எவ்வாறிருக்கும் என்று கூறவில்லை. இவர்களிலும் மாறுபட்டு அடிகளார் அந்த ஆதிநாதத்தின் ஒலி எப்படிப்பட்டது என்பதை ஒர் உருவகத்தின்மூலம் விளக்குகின்றார். சங்கு திரண்டு முரன்று எழும் ஒசை என்பதற்குப் பல சங்குகள் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும் ஒலி என்று பொருள் கூறியது அவ்வளவு முழுமையானதாகப் படவில்லை. அக்காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சங்கு ஊதுபவர் பலர் இருந்தனர். அனைத்துச் சங்குகளும் ஒன்றுதிரண்டு ஒரே நேரத்தில் ஒலியெழுப்புவது இயல்பாக நடைபெற்றுவந்த ஒன்றாகும். அதை அடிகளார் பாடினார் என்று கூறுவது சரியென்று படவில்லை. அவ்வாறானால் சங்குகள் திரண்டு ஒலிக்கும் ஒலியை இங்கு ஏன் பேசவேண்டும்? அன்றியும் சங்கின் ஒலி தொடக்கத்தில் விறுவிறுப்புடன் தொடங்கி ஊதுபவரின் மூச்சுக்காற்றுக் குறையக் குறைய ஒலி அளவை இறங்கிக்கொண்டே செல்லும். ஆனால், அடிகளார் முரன்றெழும் ஒசை தழைப்பன'என்றல்லவா கூறுகின்றார்! தழைத்தல் என்றால் நாளும் வளர்ச்சியடையும் ஒன்றையல்லவா அது குறிக்கும். சங்கின் ஒசை சென்று தேய்ந்து இறுமே தவிரத் தழைக்கும் இயல்புடையதன்று. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் சங்கு திரண்டு