பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_289' முரன்று எழும் ஓசை’ என்பது உவமைக்காக வந்ததே தவிர வேறில்லை என்பது தெளிவாகும். இந்த முரன்றெழும் ஓசை தளர்ச்சியடையாமல் மேலும்மேலும் தழைப்பதாக இருப்பின் அது எவ்வாறிருக்குமோ அதுபோல, ஆதிநாதம் முரன்று எழும் ஒசையாய்த் தழைக்கும் என்று பொருள் காண்பதே சரியானதாகும். ஆனந்த மாலை ஆனந்த மாலை என்ற பெயரில் வழங்கும் இப்பாடல் களுக்குக் கொடுக்கப்பட்ட இத்தலைப்புப் பொருந்தாது என்று முன்னரே கூறியுள்ளோம். கிடைத்துள்ள ஏழு பாடல்களில் காணப்பெறும் திரண்ட கருத்து தம்முடைய தகுதியின்மை காரணமாகக் குருநாதர் விட்டுப் போய் விட்டார் என்று புலம்புவதேயாகும். அடுத்துத் தம் வேண்டுதலை இறங்குமுறையில் பேசியுள்ளதைக் காணலாம். இந்த அடிப்படையைக் கொண்டு பார்த்தால் அச்சோப் பத்தின் முன்னரும் யாத்திரைப் பத்தின் பின்னரும் இப்பதிகத்தை அமைத்தவர்கள் இந்த வைப்புமுறையின் பொருத்தமின்மையைச் சிந்திக்க வில்லை யென்றே தோன்றுகிறது. இதுபற்றிச் சிந்திக்கச் சிந்திக்கப் பல புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. முப்பத்தொன்பதாவது பதிகத்திற்குத் தரப்பெற்றுள்ள, 'திருப்புலம்பல்” என்ற தலைப்பு, ஐம்பதாவது பதிகமாகிய இதற்குத் தரப்பட்டிருத்தல் வேண்டும். திருப்புலம்பல் என்ற தலைப்பில் காணப்பெறும் மூன்று பாடல்ளும் மிக்க பெருமிதத்தோடு 'பூங்கழல்கள் அவை அல்லாது எவை யாதும் புகழேனே. (55) என்றும், 'உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே' (557) என்றும், கற்றாவின் மனம்போலக்