பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலாப் பத்து 9 19 பாழ்நிலச் சொந்தக்காரனுக்குப் பொன்னைப் பொதிந்து வைத்த துணிமூட்டையொன்று (கிழியீடு) எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் கிடைத்ததுபோல, பயனிலியாய்க் கிடந்த தமக்கும் எதிர்பாராத இடத்தில் (திருப்பெருந்துறையில்) எதிர்பாராத நேரத்தில் (குதிரை வாங்கச் சென்ற நேரத்தில்) குருநாதர் எதிரே தோன்றித் தம் சிவந்த திருவடிகளாகிய தாமரைகளைத் தம் தலைமேல் வைத்துப் பணிகொண்டார். இங்ஙனம் குருநாதர் கிடைத்தது தம்முடைய முயற்சி, விருப்பம் என்பவற்றால் அன்று என்பதைக் குறிக்கவே "கீழ்ச்செய் தவத்தால் முற்பிறவிகளின் செய்த தவத்தால்) எனறாா. அந்தத் தவத்தின் விளைவாகப் பயனின்றிக் கிடந்த அவருடைய தலை, குருநாதர் திருவடிகளைத் தாங்குபலகையாக மாறி மேலும் அத்திருவடிகளுக்குத் தொண்டு செய்யும் சிறப்பையும் பெற்றது என்கிறார். ஒரு பேரரசின் அமைச்சராக இருந்தவருக்கு, ஆயிரக்கணக்கான பிரச்சினைகளும் சிந்தனைகளும் தலையில் குடிகொண்டிருந்திருக்கும். எனவே, இவற்றை ஒதுக்கிவைத்துவிட்டுச் சிவசிந்தனை அத்தலையில் புகவேண்டுமானால் அதற்கு வாய்ப்பே இல்லை. வழியோடு சென்ற வறியனுக்குப் பொன்மூட்டை கிடைத்தாற்போல், ஆன்மிகத்தில் வறியராயிருந்த அமைச்சருக்குக் குருநாதர் சிக்கினார். பொன்மூட்டை வறியவனின் வாழ்க்கையைத் திசைதிருப்பியதுபோல, குருநாதரின் திருவடி, அமைச்சரின் வாழ்க்கையைத் திசை திருப்பிவிட்டது. - தம்முடைய தலையில் குருநாதர் திருவடி பட்ட விசேடத்தால் அத்திருவடிகளுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்புத் தமக்குக் கிட்டியது என்கிறார்.