பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 உதிருவாசகம் சில சிந்தனைகள்-5 கசிந்துருக வேண்டுவனே. (558) என்றும் முடிகின்றன. இந்த ஒன்றைத்தவிர வேறு எதையும் விரும்பவோ சட்டை செய்யவோ மாட்டேன் என்று பாடுதல் அவருடைய பெருமித மனநிலையைக் குறிக்கின்றது. ஆனந்தமாலை என்ற தலைப்பு கொடுக்கப்பட வேண்டுமென்றால் திருப்புலம்பலின் அந்த மூன்று பாடல்களுக்கு அதனைத் தந்திருக்க வேண்டும். இன்றைய பதிப்புகள் அமைந்துள்ள முறையில் தம் இழிநிலையை நினைந்து பெருவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு பாடல்களும் ஆனந்தமாலை என்ற தலைப்பில் ஐம்பதாவது பதிகமாக இந்த இடத்தில் இடம்பெறுவது ஒருசிறிதும் பொருந்துவதாகத் தெரியவில்லை. நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே (615 என்று பாடியவர் மறுபடியும் தாம் கழிக்கப்பட்டுவிட்டதாகப் பாடுவது எவ்விதத்தில் பொருந்தும்? இந்தப் பகுதியின் ஏழு பாடல்களும் கோயில் மூத்த திருப்பதிகத்தின் முன்னர் எங்கோ ஒர் இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பல பத்துக்களைப்பற்றி முன்னர்ப் பேசியபொழுதே வைப்புமுறை சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுது தலைப்பும் சரியில்லை, வைப்புமுறையும் சரியில்லையென்று ஆனந்தமாலைபற்றி நினைக்க வேண்டியுள்ளது. இது எவ்வாறாயினும், இங்குக் காணப்பெறும் ஏழு பாடல்களும் என்ன சிந்தனையைத் துரண்டுகின்றன என்பதைப்பற்றி இப்பொழுது காணலாம். ஆனந்தமாலையின் முதற்பாடலின் (643 முதலிரண்டு அடிகளும் ஒரு புதிய கருத்தை வெளியிடுகின்றன. மனிதர்களைவிடத் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்