பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_27 புண்ணியம் செய்தவர்கள் தேவலோகம் செல்கின்றனர் என்றும் ஒரு நம்பிக்கை இந்நாட்டைப் பொறுத்தவரையில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. இதனைத் தகர்க்கும் முறையில் இப்பாடலின் முதலிரண்டு அடிகள் அமைந்துள்ளன. அகன்று பரந்து விரிந்துள்ள இந்த 3Ᏹ Ꮮ©ó மாயையிலிருந்து விடுபட்டவர்கள் தேவர் உலகம் செல்வதில்லை. அதற்குப் பதிலாக இறைவனின் மின்நேர் அனைய பூங்கழல்களை அடை'கின்றார்கள். தேவர்களோ எனில், இன்னும் மலர்பறித்து அவன் திருவடிகளில் இட்டு வழிபாடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் பூங்கழல்களை அடையவில்லை என்ற வினாவை எழுப்பினால், உண்மை விடை கிடைக்கும். உலகிலுள்ள பலரை மயக்கும் இந்த மாயை, தேவர்களையும் விட்டுவைக்கவில்லை. மாயையோடு வாழ்கின்ற இந்தத் தேவர்கள், இறைவன் திருவடிகளை வழிபட்டு என்ன பயன் அடைகிறார்கள் தெரியுமா? மறுபடியும் இந்த மண்ணிடை வந்து பிறக்கிறார்கள். இம்மண்ணிடைப் பிறந்தாலும், முன்னர் செய்த வழிபாட்டின்காரணமாக இந்த மாயையில் சிக்குவதில்லை. சிக்காமையால் மின்நேர் அனைய பூங்கழலை அடைகின்றார்கள். அடிகளாரின் இந்த துணுக்கமான கருத்தை அறிந்துகொண்டால், நாவரசர் பெருமானின் "வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ (திருமுறை: 4-81-5) என்ற தொடருக்கும், 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே (திருமுறை:4-81-4) என்ற தொடருக்கும் உண்மையான பொருளைக் காணமுடியும். பாடலின் முதலிரண்டு அடிகளில் இக்கருத்தைக் கூறிய அடிகளார், பின்னிரண்டு அடிகளில் வியன் உலகம் கடப்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை