பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_273 கெட்டேன் என்று அடிகளார் கூறுவதற்கு என்ன பொருள்? பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது பிற்பட்டு இங்கிருந்ததையே ‘கெட்டேன்' என்ற சொல்லால் குறிப்பிட்டார். இப்பதிகத்தின் நான்காம் பாடலில் (646) திருவாசகத்தில் வேறெங்கும் காணப்பெறாத ஒரு கருத்துப் பேசப்பெறுகிறது. அடிகளார் இறைவனைக் குருநாதராகக் கொண்டு, தாம் அவருடைய அடிமை என்றும், அடைக்கலப் பொருள் என்றும் பலஇடங்களில் பாடிவந்துள்ளார். நன்று நேர்ந்தாலும் பிழை நேர்ந்தாலும் தமக்கு அதில் எவ்விதப் பொறுப்பும் இல்லை என்ற கருத்தில் நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே (502) என்று பாடியவர், இப்பொழுது அடிமைத்திறத்தை மாற்றிக்கொண்டு 646 ஆம் பாடலைப் பாடுகிறார். - இப்பாடல் கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழி கொண்டாய் எனத் தொடங்குகிறது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் ஆயிரம் நாமங்கள் இறைவனுக்கிருப்பினும் ‘கேடு இலாதாய்’ என்று விளித்தமையேயாகும். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பது இந்நாட்டு முதுமொழி. அதை அடிகளார் மனத்திற் கொண்டார்போலும், அதனாலேயே கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்’ என்று கூறி அமையாமல், கேடு இலாதாய்’ என்று விளிக்கின்றார். நான் கெட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றாய். 'கெடுகின்றேன் என்பதன் பொருள் 'உனக்கு எங்கே ஐயா தெரியப்போகிறது? நீயோ கேடில்லாதவன்; பிறர் கெடுகின்றார்கள் என்பதைப்பற்றிக் கேடில்லாதவனாகிய நீ எங்கே அறியப்போகின்றாய்? கேடு என்பதை என்றாவது நீ அனுபவித்திருந்தால்தானே, அதனால் வரும் இடர்ப்பாட்டை அறிந்து, பிறர் கெடும்போது கைகொடுத்து உதவ முன்வருவாய்' என்றார்.