பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274-திருவாசகம் சில சிந்தனைகள்-5 கேட்டின் விளைவை ஒருவர் அறிந்திருந்தாலும் கெடுகின்றவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களைத் திருத்திப் பணிகொள்ள வேண்டுமா என்ன! ஆக, கேடில்லாதவனாகிய இறைவன், கெடுகின்றவர்கள் ஒவ்வொருவரையும் திருத்திப் பணி கொள்ளவேண்டும் என்று எங்கே சொல்லியிருக்கிறது என்று குருநாதர் வினா எழுப்பியிருக்கலாம் அல்லவா? அதற்குரிய விடையை நேரே தரவில்லை அடிகளார். அவருடைய வருத்தம் எல்லை கடந்து உள்ளது; ஆதலின் நேரடியாகப் பதிலிறுக்காமல், (நீயே பழி கொண்டாய்” என்று பேசிவிடுகிறார். இவ்வாறு கூறியவுடன் எதற்காகத் தம்மேல் பழிபோடுகிறார் என்பதைக் குருநாதர்தான் நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படி நினைத்தால் குருநாதருக்கே விளங்கியிருக்கும். வழியோடு போன அமைச்சரை இழுத்துப் பிடித்தது யார்? தம் திருவடியில் வந்து வீழுமாறு செய்தவர் யார்? அடியார் கூட்டத்திடையே அமரச்செய்தவர் யார்? திருவடி தீட்சை செய்தவர் Այրrrr P அற்புதமான அமுததாரைகள் ஏற்றியவர் யார்? பொதுவினில் வருக என்று கூறியவர் யார்? பரா அமுது ஆக்கவேண்டும் என்று ஆணையிட்டவர் யார்? இவ்வளவையும் செய்தவர் குருநாதர்தானே! இவ்வளவும் செய்து, எனை நான் என்பது அறியேன்” என்று சொல்லும் அளவிற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஒருவர் திடீரென்று கைவிட்டுவிட்டார். 'கெடுமா கெடுகின்றேன்’ என்று நொந்து பேசும் அளவிற்கு இவரைக் கைவிட்டால் மேலே சொன்னவற்றைச் செய்த குருநாதர் தம் பொறுப்பை எப்படித் தட்டிக்கழிக்க முடியும் ? ஆகவேதான், "பழிகொண்டாய்' என்று அடிகளார் பேசுகிறார். பாட்டின்