பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_215 அடிப்படையில் நின்று பார்த்தால் பழிகொண்டாய்” என்று அவர் பேசுவது நியாயமே என்று தோன்றுகிறது. இதன் எதிராகத் தோழமை உறவில் ஈடுபட்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் செய்துகொடுத்த சத்தியத்தை மீறியதால் கண்ணை இழந்தார். தம்முடைய பிழையை நினைந்து பல பாடல்கள் பாடி, காஞ்சியில் ஒரு கண்ணைப் பெற்றார். ஒரு கண்ணைப் பெற்றபிறகும் திருவாரூர் சென்றபிறகு நீரே பழிப்பட்டீர் என்று பாடுவது வியப்பை உண்டாக்குகிறது. விற்றுக் கொள்வி ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றும் செய்ததில்லைகொத்தை ஆக்கினீர் எற்றுக்கு அடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதிரே (திருமுறை:7-95-2) சத்தியம் செய்து கொடுத்ததை மீறும் தவற்றைச் செய்திருந்தாலும் குற்றம் ஒன்றும் செய்தது இல்லை என்று பாடுகிறார் நம்பியாரூரர். இது சரியா என்று சிந்தித்தால், பாடலின் முதலடியில் இதற்குரிய விளக்கம் தருகிறார் ஆரூரர். குற்றம் செய்தவர் யார்? நம்பியாரூரர் என்ற தனிமனிதரா? இல்லை, அப்படி ஒருமனிதர் இல்லவே இல்லை ஆவணம் காட்டி அடியனாக என்றைக்கு ஏற்றுக்கொண்டாரோ அன்றிலிருந்தே தன்னுரிமை பெற்ற நம்பியாரூரர் என்ற ஒருவர் மறைந்துவிடுகிறார். இப்பொழுது இருப்பவர் இறைவனின் அடிமை. அந்த உடைமையை (அடிமையை) உடையவனாகிய இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். அந்த உடைமை என்ன செய்தாலும் அதற்குப் பொறுப்பு, செய்தனவே தவமாக்கும் உடையவனையே சேரும், இந்த அடிப்படையில்தான் 'குற்றம் ஒன்றும் செய்ததில்லை’ என்று பாடுகிறார். நம்பியாரூரர் குற்றமற்றவர் என்றால் அவருக்குத் தண்டனை கொடுத்தவன் பழிக்கு ஆளாகிறான். -