பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276-ல் திருவாசகம்_சில சிந்தனைகள்-5 மணிவாசகர், சுந்தரர் ஆகிய இருவரும் "பழிகொண்டாய்' என்றும் பழிப்பட்டீர் என்றும் பாடுவது முற்றிலும் பொருத்தமானதே என்பது நன்கு விளங்கும். இப்பகுதியில் ஐந்தாம் பாடலின் (647) நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ என்ற ஈற்றடி சிந்திக்கற்பாலது. உலகத்தில் மனிதர்களிடையே இன்றும் காணப்பெறும் ஒரு இயல்பாகும் இது. எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு மனிதரையோ அல்லது எந்த ஒரு பொருளையோ முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் இயல்பு இல்லை. ஏற்றுக் கொள்ளும் பகுதியோடு ஏற்றுக்கொள்ள விரும்பாத சில பகுதியும் உண்டு. அதை நினைவுகூர்ந்து பழிகொண்டாய்” என்று இதற்கு முந்தைய பாடலில் பேசிய அடிகளார், இன்னும் கொஞ்சம் சினம் மிகுந்தவராய் ஐயா! நீயே என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டாய். இப்பொழுது என்ன செய்கிறாய்? என்னுடைய அடிமைத் திறத்தை மட்டும் நீயே வைத்துக்கொண்டு என்னைமட்டும் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்? இந்த அடிப்படையை மனத்தில் கொண்டுதான் இதற்கு முந்தைய பாடலில் (646) உன் நடுவு நிலைமை என்னாயிற்று என்று கேட்கிறார். இந்த ஏழு பாடல்களையும் அவற்றின் ஈற்றில் வரும் தொடர்களையும் ஒருங்குவைத்துப் பார்த்தால். அடிகளாரின் ஆறாத் துயரம் எந்த அளவிற்கு மிகுந்துள்ளது என்பதை அறியமுடியும். இருந்தேன் நோய்க்கு விருந்தாயே (644) என்றும், கொடியேன் என்றோ கூடுவதே (645) என்றும், கூடும் வண்ணம் இயம்பாயே’ (643) என்றும், நடுஆய் நில்லாது ஒழிந்தக்கால் நன்றோ (645) என்றும், நான்தான் வேண்டாவோ (647) என்றும்,