பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை_27 'இனித்தான் தேற்றாயே (648) என்றும், செய்வது ஒன்றும் அறியேனே’ (649) என்றும் பாடியுள்ளமை சிந்திக்கற்பாலது. 'ஐயா நோய்க்கு விருந்தாக என்னை இங்குத் தங்கும்படி செய்துவிட்டாய். இப்பொழுது நீ செய்ய வேண்டியது ஒன்றுண்டு. ஒரு கணமும் இனித் தாமதித்துப் பயனில்லை. கொடியேனாகிய யான் எப்பொழுது உன் திருவடி வந்து அடையப்போகிறேன்-என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தவர், குருநாதர் பதில் ஒன்றும் சொல்லாததால் ஐயா! நீயாக என்னைக் கூட்டிக் த கொள்ளாவிட்டாலும் சரி. நானாகப் புறப்பட்டு வந்து உன்னைக் கூடும் வழியையாவது சொல்லக்கூடாதா? என்கிறார். - இதற்கும் குருநாதர் விடை கூறவில்லை. ஆதலால் இப்பொழுது அடிகளாரின் நொந்த மனம், குருநாதரின் நடுவுநிலையையே வினாப்பொருள் ஆக்குகிறது. 'உன் நடுவு நிலைமை ஐயத்துக்குரியதாகிறது என்று அடிகளார் வேண்டியும்கூட அந்தக் குருநாதர் இரக்கம் காட்டவில்லை. மேலே கூறிய நடு நிலை இன்மையை விளக்குவார்போல "ஐயா! என்னை அடிமையாக ஏற்றுக்கொண்ட நீ, என் அடிமைத்திறத்தைமட்டும் வைத்துக்கொண்டு என்னை ஒதுக்கியது எந்த முறையில் நியாயமாகும்’ என்று வினவினார். அதற்கும் விடை வராமற் போகவே நம்பிக்கை இழந்த நிலையில் மேலே கூறிய எதனையும் செய்யாவிட்டாலும் துயரில் ஆழ்ந்துகிடக்கும் என்னை ஏதேனும் சொல்லித் தேற்றக்கூடவா உன்னால் முடியாமல் போய்விட்டது” என்று பேசிமுடித்தார். அவர் வேண்டுகோள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இறுதியாக நம்பிக்கை இழந்த நிலையில், ஆழமான புலம்பல், ஏழாம் பாட்டின் (649) இறுதி அடியின், இறுதித் தொடராகச் செய்வது ஒன்றும் அறியேனே என்று வெளிப்படுகிறது.