பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருவாசகம் சில சிந்தனைகள்-5 568. கொம்மை வரி முலைக் கொம்பு அனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் அம்மை குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 10 இப்பாடல் அமைந்துள்ள முறை பெரிதும் குழப்பத்தைத் தருவதாகவுள்ளது. 'கூறனுக்கு, செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு, இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும் என்ற முறையில் பாடல் செல்கின்றதேனும், நேரிடையாக, எளிதாகப் பொருள்கொள்ள வாய்ப்பில்லை. "கொம்பனையாள் கூறனுக்கு திருப்பணிகள் செய்வேனுக்கு என்றால் அது இயல்பான தொண்டு செய்தலைக் குறிக்கும். "செய்வேனுக்கு' என்பது எதிர்காலமாயினும் நிகழ்காலப் பொருளையே தந்துநிற்கிறது. திருப்பணிகள் செய்தல் என்பது பெரும்பாலும் உடல்பற்றியதே ஆகும். கூலி வாங்கிக்கொண்டு கோயில் கட்டும் பணியில் ஈடுபடுபவர்களும் ஒருவகையில் பார்த்தால் கோயில் திருப்பணியையே செய்கின்றார்கள் என்று கூறிவிடலாம். இப்படி உடல் ரீதியாக எந்தத் திருப்பணியையும் அடிகளார் செய்ய மேற்கொண்டார் என்று கூற வாய்ப்பில்லை. காரணம், அவருடைய உண்மையான வரலாற்றை இதுவரை யாரும் கூறவில்லை. உடல்ரீதியான திருப்பணியா, இல்லையா என்பதைச் சிந்திக்கும்போது, அடிகளார் கூறும் செம்மை மனத்தால் என்ற இரண்டு சொற்கள் திருப்பணி என்ற சொல்லுக்குப் பொருள்செய்ய உதவுகின்றன. - அடிகளார் காலத்திற்கு முக்கால் நூற்றாண்டிற்கு முன்பிருந்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அவருடைய திருத்தொண்டத் தொகையில் மனத்தில் கோயில் கட்டிய பூசலார் நாயனாருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது.