பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280-திருவாசகம்-சில சிந்தனைகள்-5 ஆனால், அச்சோப் பதிகத்தின் நிலைமை வேறு. ஒவ்வொரு பாடலிலும் முன்னிரண்டு அடிகள் திருவாதவூரர் வாழ்க்கையையும், பின்னிரண்டு அடிகள் அருள்பெற்ற மணிவாசகரின் வாழ்க்கையையும் குறிக்கின்றன என்று முன்னரே கூறியுள்ளோம். இவை இரண்டையும் மணிவாசகரே கண்டு பாடினார் என்று கூறினால், இது சராசரி மனிதரின் வாழ்க்கை போலாகிவிடும். சராசரி மனிதர்களைவிட முற்றிலும் வேறுபட்டு மிகமிக உயர்ந்த நிலையில் இருக்கின்ற ஒருவர், அடிகளார் என்பதை மறத்தலாகாது. எனவே, இந்த இரண்டு வாழ்க்கையையும், அதில் சற்றும் சம்பந்தப்படாமல், புறத்தே நின்று ஒர் அருளாளர் பார்க்கின்றார். திருவாதவூரர் வாழ்க்கையில் ஒரு வெறுப்போ மணிவாசகர் வாழ்க்கையில் ஒரு விருப்போ இதனைக் காண்கின்ற அருளாளருக்கு இல்லை. புறநிலையில் நின்று நடந்ததை அப்படியே எடுத்துச் சொல்வதுதான் பாடலைப் பாடும் அருளாளரின் வேலை. இங்கு ஒரு நியாயமான ஐயம் தோன்ற இடமுண்டு. ஒன்பது பாடல்களிலும் முதலிரண்டு அடிகள் தன்மை ஒருமையாகவும் பின்னிரண்டு அடிகளும்கூடத் தன்மை ஒருமையாகவுமே வருகின்றன. அப்படியானால் இவ்ற்றைப் பாடுகின்றவர் தம்மைச் சுட்டித்தானே இவற்றைப் பாடியிருக்க வேண்டும். 'சிவமாக்கி எனை ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு (650) என்றுதானே பாடல் வருகிறது? எமை ஆண்ட என்றோ, எமக்கு அருளியவாறு என்றோ தன்மைப் பன்மையிற்கூடப் பேசப்பெறவில்லையே? அப்படியானால் முன்னிரண்டு அடிகளில் பேசப்பெற்றவரும், பின்னிரண்டு அடிகளில் பேசப்பெற்றவரும், இதனைப் பாடுபவரும்